யாப்புத்திருத்தம்:”தேச நலன்களுடன் கூடிய சமூக நலன்கள்” BMSஆலோசனை
-ABU NUHA-

புதிய அரசியல் யாப்புத்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்துக் கோறும் இரண்டாம் நாள் அமர்வு 16.02.2016ம் திகதி குருநாகலை மாவட்டச் செயலகத்தில்; அதற்காக நியமிக்கப்பட்ட லால் விஜேநாயக்க தலைமையிலான குழு முன்னிலையில் நடைபெற்றது. அப்போது 'தேச நலன்களுடன் கூடிய சமூக நலன்கள்' என்ற தொனிப் பொருளில் தயாரிக்கப்பட்ட தனது ஆலோசனைகளை சகோதரத்துவ ஊடக சமூகம் - BMS அங்கு முன்வைத்தது.
இந்த நிகழ்வில் சகோதரத்துவ ஊடக சமூகம் சார்பில் அதன் தலைவர் எல்.ஏ.யூ.எல்.எம். நளீர், அதன் அழைப்பாளி ஏ.ஜீ.எம்.நஜீப் ஆகியோர் யாப்புத் திருத்தக் குழு முன் ஆஜராகி இருந்தனர்.
சகோதரத்தவ ஊடக சமூகம் முன்வைத்த யோசனையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் முற்றாக நீக்கப்படக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டதுடன், ஜனாதிபதி இரு அமைச்சுக்களுக்கு மேல் தன்வசம் வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225ல் இருந்து 235 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், நேரடித் தொகுதிவாரியாக 172 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும், விகிதாசார முறைப்படி 60 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதுடன். வேடுவர், மலே மற்றும் பறங்கிய சமூகத்தினருக்கு தலா ஒரு நியமனம் உறுப்பினர் வீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. (மொத்தம் 172+60+3=235)
சகோதரத்தவ ஊடக சமூகம் முன்வைத்துள்ள யோசனையில் அடங்கியுள்ள முக்கிய விடயங்களை இங்கு தருகின்றோம்.
ஜனாதிபதி
1.ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பதில் சொல்லக்கூடியவராக இருத்தல்.
2.ஜனாதிபதியின் அதிகாரங்களை சம்பூரணமாகக் குறைக்கக் கூடாது.
3.ஜனாதிபதி இரு அமைச்சுக்களுக்கு மேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனுமதிக்கப்படக்கூடாது.
4.நீதித்துறையில் சாதாரண சட்டங்களுக்கு அவர் கட்டுபட்டவராக இருத்தல்.
உதவி ஜனாதிபதி
*உதவி ஜனாதிபதி ஒருவரை தேர்தல் மூலம் தெரிவு செய்தல்.
பாராளுமன்றம்
1.பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 இருந்து 235 ஆக அதிகரித்தல்.
2.நேரடித் தொகுதிவாரியாக 172 உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.
3.கட்சிகள் பெறுகின்ற விகிதாசார வாக்குகளுக்கு ஏற்ப 60 உறுப்பினர்கள்.
4.வேடுவர், மலே மற்றும் பறங்கிய சமூகத்தினருக்கு தலா ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் நியமனம் செய்தல்.
5.விகிதாசாரமுறையில் தெரிவாகின்ற 60 உறுப்பினர்களில் 50மூ ம் துறைசார் நிபுணர்களாக இருத்தல் வேண்டும்.
6..பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 20க்கும் 25க்கும் இடையில் பேன விதி முறைகளை ஏற்படுத்தல்.
உதவிப் பிரதமர்
*உதவிப் பிரதமர் ஒருவரை நியமனம் செய்ய யாப்பில் இடமளித்தல்
அமைச்சர்கள்
1.அமைச்சர்களின் எண்ணிக்கையை யாப்பிலே கட்டுப்படுத்தல்
2.அமைச்சர்கள் 25 பிரதி அமைச்சர்கள் 25என வரையறுத்தல்.
மாகாணசபைகளின் எண்ணிக்கை-4
1.புவியல், மற்றும் சமூகக் காரணங்களுக்காக மாகாண சபைகளின் எண்ணிக்கையை நான்காக மாற்றி அமைத்தல்.
2.மாகாணசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல். (தற்போது மொத்தம் 411 உறுப்பினர்கள் இதனை 352கக் குறைத்தல்)
3.மாகாண அமைச்சர்கள் நியமனத்தைத் தவிர்த்து கூட்டுப் பொறுப்பை ஏற்படுத்தும் வகையில் அமைச்சுக்கு குழு முறையை ஏற்படுத்தி அதற்கு ஆளும் எதிரணி உறுப்பினர்களை நியமித்து மாகாண அமைச்சை முன்னெடுத்தல்.
4.மாகாண சபைகளின் அபிவிருத்திக்கு மத்திய அரசின் மேற்பார்வையில் வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்ள இடமளித்தல்.
மாகாண சபை உறுப்பினர்களின்; எண்ணிக்கை
1.மேல்-83தென்-42மாகாணங்கள் இணைந்த மாகாண சபை உறுப்பினர் =125
2.வடக்கு-29கிழக்கு-28மாகாணங்கள் இணைந்த மாகாண சபை. உறுப்பினர் =57
3.வடமேல்-40வடமத்திய-29 மாகாணங்கள் இணைந்த மாகாண சபை.உறுப்பினர் =69
4.மத்திய-43சப்ரகமுவ-32ஊவா-26மாகாணங்கள் இணைந்த மாகாண சபை. உறுப்பினர் =101
உள்ளுராட்சி மன்றங்கள்
*நேரடி வட்டார அடிப்படையில் 70% என்றும் விகிதாசாரத்திற்கு 30% என்ற திருத்தத்தை உறுதி செய்தல்.
தொழில் வாய்ப்பு விவகாரம்
*அரச தொழில் வாய்ப்பு விடயத்தில் இன விகிதாசாரத்தை உத்தரவாதம் செய்தல்.
எல்லை நிர்னயம் தொடர்பாக
ழூமாகாண, மாவட்ட, தொகுதி உள்ளுராட்சி மன்ற மற்றும் கிராம சேவகர் பிரிவுகளுக்கு எல்லைகள் புனர் நிர்னயம் செய்யும் போது பொது விதி முறை பின்பற்றப்பட வேண்டும். எந்த ஒரு இனத்திற்கும் அநீதிகள் இழைக்கப்படாதவாறு அதிகாரமுள்ள சுயாதீன ஆணைக்குழுவின் மேற்பார்வையில் அதனை மறுசீர் அமைத்தல்.
கல்வி மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்கள்
ழூஅபிவிருத்தி, கல்வி போன்ற விடயங்களுக்கு வளங்களைப் பகிரும் போது பாரபட்சமற்ற முறையில் அவை மக்களுக்குச் சென்றடைவதை உத்தரவாதப்படுத்தல்.
இதர அம்சங்கள்
1.பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களின் குறைந்த பட்சக் கல்வித் தகைமை க.பொ.த. .உயர்தரமாக அமைதல் வேண்டும். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இது க.பொ.த. சாதாரணதரமாக இருககலாம்.
2.வேட்பாளர்களாக நியமனம் பெறுபவர்கள் தான் வசிக்கின்ற பொலிஸ் பிரதேசத்தில் நற்சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும். அவர் நீதி மன்றத்தால் கொலை, கொள்ளை, கற்பளிப்பு, போதை பொருள், ஆட்கடத்தல், தேசத்துரோக செயல்கள் போன்ற பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் காரணமாக தண்டிக்கப்பட்டவராக இருக்கக் கூடாது.
3.வாரிசு அரசியலுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
4.நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு கடுமையான சட்ட விதிமுறைகள் அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தல்.
5.பாரியளவில் தேசிய சொத்துக்கள், வளங்களைக் கொள்ளையிடுபவர்களும் அதற்கு சேதங்களை விளைவிப்பவர்களும் உறுதிப்படுத்தப்படும் பட்சம் அவர்களது குடியுரிமையை ரத்துச் செய்தல்.
6.அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போது கடுமையான தண்டனைகளை வழங்கும் விதிமுறைகளை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.அவர்களுக்கு கண்டிப்பான ஒழுக்கக்கோவையை அறிமுகப்படுத்தல்.
7.நிருவாகச் செயல்பாடுகளில் அரசியல்வாதிகளின் தலையீட்டை முற்றாகத் தவிர்ப்பதற்கு விதிமுறைகளை ஏற்படுத்தல்
இன ஐக்கியம்
1.இன ஐக்கியத்தைக் கட்டிக்காக்க யாப்பில் கடும் விதிமுறைகள் ஏற்படுத்தல்.
2.நாட்டில் இன, சமய, கலாச்சாரத் தனித்துவங்களை சுதந்திரமாக பின்பற்றுவதற்கான உத்தரவாதங்களை யாப்பில் உறுதிப்படுத்தல்.
Post a Comment