பிக்குகள் கைது, பௌத்த சமூகத்தில் அதிர்வு - அமைச்சர் சம்பிக்க
பௌத்த பிக்குகளை கைது செய்ய முன்னதாக மாநாயக்க தேரர்களுக்கு அறிவிக்க வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லவில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்.
சிவில் வழக்குகளின் போது பௌத்த பிக்குகளை கைது செய்வதற்கு முன்னதாக அது குறித்து குறித்த பிக்குவின் பீடத்திற்கு அறிவிக்க வேண்டும்.
சில பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் சில பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலைமையானது பௌத்த சமூகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடும்.
நாட்டின் சட்டத்திற்கு புறம்பான வகையில் தமக்கு சலுகை வழங்குமாறு பௌத்த பிக்குகள் எவரும் கோரியதில்லை.
பிக்குகளை கைது செய்யும் போது ஓர் பொது விதிமுறையை பின்பற்ற வேண்டும்.
குற்றவியல் சட்டத்தில் அல்லாமல் சிவில் சட்ட வழக்குகளின் போது இந்த பொது விதிமுறை பின்பற்ற வேண்டும்.
பொதுத் தேர்தலின் போது உறுதியளிக்கப்பட்டதனைப் போன்று பௌத்த மதத்தை பாதுகாக்க பிரதமரும் ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
பவுத்த பிக்கு என்று சொல்லிக்கொண்டு அடாவடித்த்தனம் காட்டினால் அடாவடிக்காரனுக்கு எடுக்க வேண்டிய சட்டப்படிதான் கைது செய்யப்பட வேண்டும்.சாதாரண பிரச்சினை என்றால் அதற்க்கு சிவில் முறையில் கைது செய்யலாம் கொலை,கொலை அச்சுறுத்தல் ,கொள்ளை ,குழப்பம் போன்ற கிரிமினல் வேலைகளை செய்யும் பிக்குகளை அந்தக்குற்றத்துக்கு தகுந்த மாதிரித்தான் கைது செய்ய வேண்டும்.மத குருவுக்கு மக்கள் மரியாதை கொடுக்க வேண்டும் அதேபோன்று மதகுருவும் மரியாதையாக இருக்க வேண்டுமே.(பொன்னான கத்தியன்றால் பொக்குளில்குத்த முடியுமா?)மரியாதை கொடுத்துத்தான் மரியாத வாங்க வேண்டும்.
ReplyDeleteHe is in behind of several Buddhist extremist. He ever try to protect them
ReplyDeleteஇவரின் உண்மையான முகம் தற்போது வெளியாகிறது
ReplyDelete