மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின், புதிய நூலகம் பற்றிய ஓர் அறிமுகம்
அ(z)ஸ்ஹான் ஹனீபா ~
மதீனாவில்
அமைந்திருக்கும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஒரு மாபெரும் நூல்
நிலையம் திறந்து வைக்கப்பட்டது , ஏற்கனவே இருந்த நூலகத்துல் இட வசதி ,
தொழில்நுட்ப வசதிகள் போதாமையின் காரணாமகவே இப் புதிய வாசிகசாலை திறந்து
வைக்கப்பட்டுள்ளது .
இது தற்பொழுது புதுப் பொலிவுடனும் , உச்ச கட்ட தொழில்நுட்ப வசதிகளும் நிறைந்த ஒரு நூல் நிலையமாக பிரகாசிக்கின்றது .
ஒரு
புத்தகம் இரவல் எடுக்க வேண்டுமெனில் அங்குள்ள பதிவு இயந்திரத்தில் எமது
பல்கலைக்கழக மாணவ அட்டையின் இலக்கங்களை பதிந்த பிறகு புத்தகத்தை scan
செய்ததும் இரவல் பெற்றுக் கொள்ள முடியும் , இவ்விரவலின் காலம் இரண்டு
கிழமையையே ஆகும் .
அவ்வாறே ஒரு புத்தகத்தை PDF முறையில்
பெற்றுக் கொள்வதற்கு எமக்குத் தேவையான நூலை கொண்டு சென்று அங்கு scan க்கு
என்று உள்ள ஒரு இயந்திரத்தில் scan செய்து அவற்றை pen drive இல் பதிவேற்றம்
செய்து கொள்ளலாம் .
மேலும் அக்காலம் தொட்டுள்ள முன் சென்ற அறிஞர்களின் கேயேடுகளின் மூலப் பிரதிகள் நிறையவே காணப்படுகின்றன .
சிறந்த
முறையில் ஒவ்வொரு துறைக்கான நூற்களும் ஒழுங்குபடுத்தப்பட்டு , நேர்த்தியான
வகையில் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. மாணவர்கள் மாத்திரமன்றி பொது மக்களும்
பயனளிக்கும் வகையில் எல்லோருக்கும் பொதுவாக அமைந்திருப்பது இதன் விஷேட
அம்சம் எனலாம் .
மூன்று மாடிகளைக் கொண்ட இந் நூல்
நிலையம் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் அமைந்திருப்பதோடு "
அல் மக்தபதுல் மர்கஸிய்யா " எனும் புதிய பெயருடன் காட்சியளிக்கின்றது .
சுமார்
25,000 மாணவர்களைக் கொண்ட இப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் வெவ்வேறு
பீடங்களில் பிரத்தியேகமான சிறு நூல் நிலையங்களும் அமையப் பெற்றிருப்பதும்
குறிப்பிடத்தக்கது .
ஆக இவ்வாறு பல இலட்சக் கணக்கான
புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள இந் நூலகத்தின் நோக்கம் அனைவரும் பயன்
பெற்று சிறந்த அறிவாளிகளாக பிரதிபலிப்பதே ஆகும் .
அனைவரும் இவ்வாறான நூலகத்திலிருந்து பயனடைந்து சமூகத்திற்கு பிரயோசனம் அளிக்கும் வகையில் செயற்படுவோம் .
Post a Comment