வீடமைப்பு கடன்களை ரத்துச்செய்யுங்கள் - மௌலவி சுபியான்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடமைப்பு திட்ட கடன்களை ரத்துச்செய்யுங்கள் என யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் மௌலவி பி.ஏ.எஸ் சுபியான் தெரிவித்தார்.
யாழ் மாவட்டச் செயலகத்தில் 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யுத்தகாலத்தில் பல்வேறுபட்ட சேதங்களுக்குள்ளான மக்களிடம் தேசிய வீடமைப்பு அதிகார சபை கடன்களை மீண்டும் அறவிட வேண்டகோள் விடுத்துள்ளது.
அரசாங்கம் வீடில்லாத மக்களிற்கு மானியமாக வீடுகளை அமைத்து கொடுக்கும் இவ்வேளையில் இவ்வாறான வேண்டுகோள் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.
எனவே குறித்த கடன்களை மீளவும் செலுத்துமாறு இச்சபை கோருவதை ரத்துச்செய்வதற்கு இக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்
Post a Comment