Header Ads



கல்முனையில் கடன் வாங்கி, மருந்து வாங்கும் அவலம் - பைசல் காசிம் களத்தில் குதிப்பாரா..?

-உடையான்-

கல்முனை  வடக்கு ஆதார வைத்தியசாலையில்  கண் நோய்களுக்காக   சிகிச்சை பெறும்  நோயாளர்களுக்கு கண்களினுள் விடும் சொட்டு மருந்துகளில்  அநேகமானவை  தனியார் மருந்துக்கடைகளில்  வாங்குமாறு  விடுதிகளில் உள்ள  டாக்டர்களால்  சிட்டை எழுதிக்கொடுக்கப்படுகின்றன. 

இவ்வாறு எழுதிக் கொடுக்கப்படும் சிட்டைகளில் குறித்த  சில கம்பனிகளினால்  உற்பத்தி செய்யப்படும்  மருந்துகளின்  விற்பனைப்பெயர் மட்டுமே  எழுதப்படுகின்றது. மருந்துகளின்  மருத்துவரீதியான  பெயர்கள்  எழுதப்படுவதில்லை.

இவ்வாறு  மருத்துவப்பெயர் எழுதப்படாத மிகவும் விலை கூடிய  அந்த மருந்துகளை வாங்குவதற்கு  ஏழை  மக்களும்,அன்றாடம்  உழைத்து  உண்போரும்   மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகின்றார்கள். அதிக விலையான இம்மருந்துகளை கடன் வாங்கியே  வாங்கும் நிலையும்  ஏற்படுகின்றது.

அமபாரை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  பாராளுமன்ற உறுப்பினரே  பிரதி சுகாதார  அமைச்சராகவும்   இருக்கின்றார். ஏன்  இந்த வைத்தியசாலைகளிற்கு  உரிய  மருந்துகள் அனுப்பி வைக்கப்படுவதில்லை எனவே சமபந்தப்பட்ட  அதிகாரிகளும்  பிரதி அமைச்சரும் இவ்வைத்தியசாலையில் நிலவும் மருந்துகளுக்கான  பற்றாக்குறையை போக்கி  கண்  நோய்களிற்கான  சிறந்த மருந்து வகைகளைபெற்றுக்கொடுப்பதன்  மூலம்   மக்களது  குறைகளை களைவார்களா ?

1 comment:

  1. இவ்விடயம் சார்பான வைத்தியசாலை ஊழியர்களின் அசமந்தப் போக்கும் இதற்கு காரணமாக இருக்கலாம். குறித்த வைத்தியசாலையில் கடந்த காலங்களில் அரசியல் குழப்பங்கள் வெகுவாக இடம்பெற்றது.

    ReplyDelete

Powered by Blogger.