Header Ads



ராஜிதவுக்கு திடீர் சுகவீனம், சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்படுகிறார்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் அமைச்சின் வேலைப்பளு காரணமாக அமைச்சர் ராஜித சேனாரத்ன நாளொன்றுக்கு நான்கு மணித்தியாலங்களுக்கும் குறைவாகவே தூங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

இதன் காரணமாக இன்று மாலை திடீர் சுகவீனம் மற்றும் மார்பு வலி காரணமாக நாராஹேன்பிட்ட லங்கா ஹொஸ்பிட்டலில் அமைச்சர் ராஜித அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரின் உடல்நிலை திருப்திகரமானதாக இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது குடும்ப வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

அதன்போது அவரது உறவினர்கள் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலதிக பரிசோதனைகளுக்காக அவரை சிங்கப்பூரிற்கு அழைத்துச் செல்ல இருப்பதாக கூறினார்.

அதன்படி குறித்த பரிசோதனைகளுக்காக சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன இன்று இரவு சிங்கப்பூர் நோக்கி செல்ல இருப்பதாக அமைச்சரின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

தேவையேற்படின் அங்கு அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட இருப்பதாக அவர் கூறினார்.

சிங்கப்பூரில் வைத்திய பரிசோதனைகளின் பின்னர், அமைச்சர் எதிர்வரும் 22ம் திகதி இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

3 comments:

  1. அப்போ நம் நாட்டில் நல்ல வைத்தியர்களே இல்லையா....????

    ReplyDelete
  2. So in our country don't have good any doctors.....????

    ReplyDelete
  3. இருக்கின்றனர், ஆனால் இல்லை! வரும் ஆனால் வராது என்பது போல!

    ReplyDelete

Powered by Blogger.