முரண்பாடில்லாமல் வாழ்ந்தால், அழுத்தம் கொடுக்கமாட்டேன் - மைத்திரியிடம் கூறிய ஹுசைன்
வடகிழக்கு இஇளைஞர்கள் எல்லையற்ற அநீதிகளுக்கு முகம் கொடுக்க முடியாமலே அதற்கு எதிராக ஆயுதம் ஏந்தியதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போரிட்டமைக்கான காரணத்தை அறிந்து அந்த மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கவேண்டியது அவசியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபேதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் முப்பது வருடங்களாக கொடிய யுத்தம் நடைபெற்றது என்றும் 26 வருடங்களுக்கு முன்னர் தான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபோதிருந்த பிரச்சினை இன்னும் இருப்பதாகவும் கூறினார்.
அண்மையில் இலங்கை வந்த மனித உரிமை ஆணையாளர் அல் ஹூசைன் இலங்கை எழில் மிக்க நாடு என்றும் இந்த நாட்டில் முரண்பாடில்லாமல் அனைவரும் வாழ்ந்தால் எந்த அழுத்தத்தையும் தாம் கொடுக்கப் போவதில்லை என்று கூறியதாகவும் மைத்திரி குறிப்பிட்டார்.
வடக்கின் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதை முறையாக கண்டறியவேண்டும் என்று கூறிய அவர் எல்லையற்ற அநீதிகளுக்கு முகம் கொடுக்க முடியாதே அவர்கள் ஆயுதம் ஏந்தினர் என்றார்.
வடக்கிலும் தெற்கிலும் வாழும் அனைவருக்கும் நீதியான சமூகம் ஒன்றே தேவைப்படுகிறது என்று கூறிய அவர் சகவாழ்வும் ஒற்றுமையுமே இலங்கைக்கு இப்போது தேவை என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment