Header Ads



ஹரிஷ்ணவிக்காக வடக்கில் ஹர்த்தால்

வவு­னி­யாவில் துஷ்­பி­ர­யோ­கத்­துக்குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட ஹரிஷ்­ணவி என்ற மாண­விக்கு நடந்த கொடூர சம்­ப­வத்தை கண்­டித்து இன்று வட மாகாணம் முழு­வதும் இரண்டு மணி­நேரம் பூரண ஹர்த்­தாலை அனுஷ்டிக்­கு­மாறு பொது மக்­களை இலங்கை தமிழர் ஆசி­ரியர் சங்கம் மற்றும் யாழ். வணிகர் சங்கம் என்­பன கோரி­யுள்­ளன.

இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசி­ரியர் சங்கம் அனுப்பி வைத்­துள்ள செய்­திக்­கு­றிப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

வவு­னியா உக்­கி­ளாங்­கு­ளத்தில் வன்­பு­ணர்வின் பின் படு­கொலை செய்­யப்­பட்ட பாட­சாலை மாண­வியின் கொலையைக் கண்­டித்து இன்று நடை­பெ­ற­வுள்ள ஹர்த்­தா­லுக்கு இலங்கைத் தமிழர் ஆசி­ரியர் சங்கம் தமது முழு ஆத­ரவை வழங்­கு­கின்­றது.

எமது பிர­தே­சங்­களில் நடை­பெறும் வன்­மு­றை­க­ளுக்கும், கொடு­மை­க­ளுக்கும், அரக்­கத்­த­னங்­க­ளுக்கும் இது வரை எந்த நீதியும் கிடைத்­த­தில்லை. அகிம்­சை­வ­ழியில் நாம் செய்­கின்ற எந்த எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களும் இது­வரை பயனைத் தந்­த­தில்லை. காலம் கால­மாக நாம் அனு­ப­வித்­து­வ­ரு­கின்ற துன்­பங்­களும், துய­ரங்­களும் சொல்லில் அடங்­கா­தவை. இதற்­காக நாம் எத்­தனை வடி­மான போராட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். அவற்­றுக்­கெல்லாம் இன்று வரை நீதி­யான எந்தத் தீர்­வு­களும் கிடைக்­க­வில்லை.

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் கொலையைக் கண்­டித்தும், நீதி வழங்­கு­மாறு கோரியும் பிர­மாண்­ட­மான ஒன்று கூடல் முன்­னெ­டுக்­கப்­பட்டு பல ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் அதில் பங்­கேற்­றனர். வட­புலம் முழு­வதும் ஸ்தம்­பித்து நீதி­கேட்டு ஆர்ப்­ப­ரித்­தனர். ஆனால் இன்று வரை அதற்­கான நீதி கிடைக்­க­வில்லை. ஆனால் மாண­வர்கள் மீதான வன்­பு­ணர்வு கொலைகள் நடந்­த­வண்ணம் உள்­ளன. சட்­டத்­தையும், சமூ­கத்­தையும் ஏமாற்றி தாம் நினைத்­ததைச் செய்யும் துஷ்­டர்கள் இந்த நாட்டில் உள்­ள­வரை எமக்கு நீதி கிடைக்­கப்­போ­வ­தில்லை.

ஆனாலும் அகிம்சை வழியை நாம் கைவி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக இன்று நடை­பெ­ற­வுள்ள ஹர்த்­தா­லுக்கு எமது சங்கம் முழு ஆத­ரவை வழங்­கு­வ­தோடு அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள், கல்­விசார் ஆள­ணி­யினர், மாண­வர்கள் பாட­சாலை வளா­கத்தில் காலை இரண்டு மணி­நேரம் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­மாறு இலங்கைத் தமிழர் ஆசி­ரியர் சங்கம் கேட்­டுள்­ளது.

அதே வேளை க.பொ.த.சாதா­ர­ண­தர மாண­வர்­க­ளுக்கு நடை­பெ­ற­வுள்ள செய்­முறைப் பரீட்­சையில் எவ்­வித இடர்ப்­பா­டு­களும் ஏற்­ப­டா­த­வண்ணம் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­மாறும் கோரு­கி­றது என செய்­திக்­கு­றிப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஹர்த்தால் அனுஷ்­டிப்புத் தொடர்பில் யாழ் வணிகர் கழகம் அனுப்­பி­வைத்­துள்ள செய்­திக்­கு­றிப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

வவு­னியா விபு­லா­னந்தா கல்­லூரி மாணவி செல்வி கங்­கா­தரன் ஹரிஸ்­ண­வியின் படு­கொ­லையை யாழ் வணிகர் கழகம் வன்­மை­யாக கண்­டிக்­கி­றது. குறிப்­பாக இச் சம்­பவம் வட பகு­தியில் இடம்­பெற்ற இரண்­டா­வது சம்­ப­வ­மாகும். இச் சம்­பவம் எமது மக்கள் மத்­தியில் ஆழ்ந்த துய­ரத்­தையும் பேர­திர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கடந்த வருடம் கொலை செய்­யப்­பட்ட வித்­தியா என்ற பாட­சாலை மாண­வியின் கொலை நடை­பெற்ற ஒரு வரு­டத்­திற்குள் இவ்­வா­றான இரண்­டா­வது சம்­பவம் இடம் பெற்­றமை கண்­டிக்­கப்­ப­ட­வேண்­டி­ய­தாகும். அர­சாங்­கமும் அத­னோடு இணைந்த நீதித்­துறை, காவல்­துறை என்­பன தீவி­ர­மாக செயல்­பட்டு இவ்­வா­றான சம்­ப­வங்கள் இனி­யா­வது இடம்­பெறா வண்ணம் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படல் வேண்டும்.

மேலும் இக் கொலையை கண்­டித்தும் நீதி கோரியும் வவு­னியா பிர­ஜைகள் அமைப்பு நேற்று மாலை 4.30 மணி­ய­ளவில் மின்னஞ்சல் மூலம் கேட்டுக்கொண்டதற்கு அமைய அவசர நிர்வாக சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாக இன்று புதன்கிழமை இரண்டு மணிநேர கடையடைப்பில் குறிப்பாக காலை 8.00 மணி தொடக்கம் முற்பகல் 10.00 மணி வரை மட்டும் கடைகளை புட்டி அமைதியான முறையில் தங்கள் கண்டனத்தை தெரிவிக்குமாறு யாழ் வணிகர் கழகம் சகல வர்த்தகர்களையும் கேட்டுக்கொள்கின்றது.

No comments

Powered by Blogger.