முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கொரு மின்னஞ்சல்..!
- இனியவன் இஸார்தீன் -
இலங்கை முஸ்லீம் அரசியல்வாதிகளே! இஸ்லாத்தின் செங்கோலை வளைத்துச் செல்பவர்களே!
உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்... எங்கள் ஏழைகளின் கூக்குரலுக்குக் கொஞ்சம் நீங்கள் செவி சாய்ப்பீர்களா?
நம்மை முஸ்லீம்கள் என்போம் நாம். நம்மை இஸ்லாமியர் என்போம் நாம். அல்லாஹூ அக்பர் என்று அடிக்கடி உரைப்போம் நாம். நாங்களே முஸ்லீம்களின்; தலைவர்கள் என்று கருதிக் கிடந்தோம் நாம். இப்படி நமக்குள் நாம் கண் விழித்துக்; கண்ட காசுக் கனவில் அல்லது நிஜமான நனவில் நம் மக்களுக்கொரு அரசியல் நாடகத்தையே இதுவரை நடத்திக் காட்டினோம். ஆனால் நமக்குள்ளிருக்கும் நீங்கள்; என்றாயினும் நம் சமூகம் சார்ந்த மொழிப் பிரச்சினை - இனப் பிரச்சினை- உரிமைப் பிரச்சினை- கல்விப் பிரச்சினை – சுகாதாரப்பிரச்சினை – தொழிற் பிரச்சினை – அபிவிருத்திப் பிரச்சினை- நிலப் பிரச்சினை – மீள் குடியேற்றப் பிரச்சினை - இனவாதப் பிரச்சினை - இஸ்லாமியர்க்கெதிரான சமயப் பிரச்சினை - கொலை - கொள்ளை - பள்ளி வாயல் தாக்குதல்- மெகா ஊழல் - நிதி மோசடி - பொதுச் சொத்து துஷ்பி;கரயோகம் என எத்தனையோ எங்கள் பிரச்சினைகளை நீங்கள ஆளுவோர் முன்நின்று இதயத்தால்; அதிரப் பேசியதுண்டா?; அல்லது என்றாவது பாராளு மன்றத்தில் பகிர்ந்தணரப் பேசியதுண்டா?

இவற்றையெல்லாம் செய்யாத நீங்கள் நம் சமூகம் சார்ந்த இன உணர்வுள்ள கட்சித் தலைவர்கள் என்றுதானே நீங்கள் உங்களை எல்லோருக்கும் இனம் காட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். கடைசி வேளை இனங்களை இணைக்க வேண்டும் என்ற அவசியத் தேவையை உணர்ந்தபோது கொல்லப்பட்ட முன்னாள் தலைவர் அமைச்சர் மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரஃப் அவர்களையும் அவருக்கு முன்னர்; வாழ்ந்து காட்டிய மூத்த முஸ்லீம் தலைவர்கள் அனைவரையும் நீங்கள் ஏன் மறந்து போனீர்கள்?; அல்லாஹ்; தந்த அல் குர்ஆனை சட்டயாப்பு நெறி மாதிரிப் பயன்;படுத்தி மக்களாட்சி செய்த மகான் உத்தம நபி (ஸல்) அவர்களின் செங்கோலை நீங்கள் ஏன் வளைத்துச் செல்கிறீர்கள்? அவர்கள் பின்பற்றிய இஸ்லாமிய நெறிக்குட்பட்ட நீதியான அரசியலை உங்களில் எவர்; பின்பற்றுகிறீர்கள்? பதவி என்ற ஏணியில் ஏறித் தாவி வந்த பலர் இப்போது ஏன் நமது எதிர்கால சந்ததிகளை எண்ணிப் பார்ப்பதில்லை? எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் நீங்கள் இருந்து கொள்ளுங்கள் ஆனால் நம் சமூக நலத்தைக் கருத்திற் கொண்டால் அல்லாஹ்வின் இஸ்லாம் என்கிற ஒரே கட்சியிலிருந்து வேறொரு கட்சி தாவி விடாதீர்கள்.
இலங்கை ஓர் ஏழை நாடு என்றாலும், விவசாயிகள் பூமியென்றாலும் நீங்களே கோடானு கோடிகளுக்குச் சொந்தக்காரர்கள் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறீர்கள். வெளிநாடுகளில் வாங்கிய கடனக் கூட கபளீகரம் செய்த முன்னாள் மெகாஊழல்; மன்னனின் ஆதிக்கக் காலடியில்தானே நீங்கள்; விழுந்து கிடந்தீர்கள். யாருக்காக வீழ்ந்தீர்கள்? இலங்கை முஸ்லீம்களுக்காக வீழு;ந்தீர்களா? உங்களுக்காகத்தானே மகிழ்ந்து வீழ்ந்தீர்கள். எதற்காக எழுந்து நிற்க முடியாமல் விழுந்தே கிடந்தீர்கள்? அந்த ஆசாமிதான் ஆள வந்தான்- அவனே கடவுளென்று அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து முஸ்லீம்களின் அவலத்தின் ஒலி கேளாமல் ஆராரோ தாலாட்டுத்தான் பாடினீர்கள். முன்னாள் ஆட்சியில் 100 சத விகித பண அபிவிருத்தி ஒதுக்கீட்டில் 37 சதவிகிதம்தான்; செலவிடப்பட்டிருப்பதாய் ஆய்வுகள் பல ஆதாரத்தோடு தெரிவிக்கின்றன.
அதே வேளை அனேக அரசியல்வாதிகள் கோடீஷ்வரர்களாகவும் கொழுத்திருக்கிறார்கள் எனவும்; அடையாளம் காட்டுகின்றன. நமக்கெல்லாம் ஒரே கொள்கைதான் இருக்கிறது. நேரடியாகவோ மறைமுகமாகவோ, வழிமுறையிலோ அல்லது வன்முறையிலோ சுவரேறிக் குதித்தாவது பணம் சேர்க்க வேண்டும் என்றுதான் பாடுபடுகிறோம். கோர்ட்டுப் போட்டுக் கொண்டு சுவரேறிக் குதிப்பதை விட அரசியலில் சேருவதுதான் மிக இலகுவான வழி என்று நாம் கருதுகிற காரணத்தால்தான் அனேகர் அரசியலை நோக்கியே அணி திரளுகிறார்கள். கோடீசுவரனாக வேண்டுமென்ற கொள்கையில் இஸ்லாத்தை புறம் தள்ளி விட்டு அரசியலில் நுழைந்து கொண்டு இனவாதிகளின் இலக்கை நமக்குள் உருவகித்துக் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் பகைவராய்த்தான் பார்க்கிறோம். குரங்கு கிழித்தெறிந்த பஞ்சுத் தலையணை போல்;; மன்னாரான், மலை நாட்டான், மட்டக்களப்பான், கண்டியான், கொழும்பான், யாழ்ப்பாணத்தான் என அந்நியத் தனத்தில் ஒரே இஸ்லாமிய சமூகத்தைப் பிரித்துப் பார்த்து பதவி போதையில் சிதற வைத்தோம் என்ற எதார்த்தத்தை எப்போது மறப்போம்?
அரசியல் என்பது காற்று மாதிரி அது ஒரே திசையில் நிலைத்திருப்பதில்லை. அது தங்கள் திசைக்கு வரும்போதெல்லாம் கூட்ட நெரிசலில் மக்களைப் பின் தள்ளி விட்டுத்தானே நாங்கள் முன்னேறி நிற்கிறோம். ஒரு தேசம் அல்லது ஒரு சமூகம் சீரான பாதையில் முன்னேற செயல் ரீதியாக ஒன்றுபட்ட மக்களின் தலைமையை நாமே கட்டமைத்தல் வேண்டும் என நீங்கள் எண்ணுவீர்களாயின் இஸ்லாமிய சமூக ஒற்றுமையில் இலங்கை யாவும் ஒரு முன்மாதிரி இருப்பதை உணர்ந்து விடும்.

கல்வி - நேர்மை - நீதி - அன்பு - ஆளுமை - ஆற்றல் - ஆன்மீக நெறி - இதய சுத்தி - பரந்த சிந்தனை – வாய்மை - வாக்கு நிறைவேற்றும் நெஞ்சுறுதி ஆகிய தலைமைத்துவத்தின் மேலாண்மைத்துறை சார்ந்த பண்புகள் கொண்ட மனிதப் புனிதனை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டும் என்பதை இப்போது இஸ்லாமிய இளைய சமதாயம் உணர்ந்திருக்கின்றது. தனக்கென தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவரிடமிருந்து அந்த சமூகம் நிராதரவாக்கப்பட்டதும் அந்த சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வு கொடுக்கப் படாமல் புறக்கணிக்கப் பட்டதும் என கவலைக்கிடமான பல அனுபவம் நமக்கு ஏராளம் இருக்கின்றன. ஒரு சமூகத் தலைமைத்துவம் என்பது அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அமானிதம் என்பதை மறக்காதீர்கள். அவற்றை நேர்மையாகவும் நியாயமாகவும் சமத்துவமாகவும் நிறைவேற்றாமல் துஷ்பிரயோகம் செய்த நிலையில் மரணிப்போரின் நிலை மறுமையில் மிகப் பயங்கரமாய் இருக்கும் என்று அபூதர் (ரலி) குறிப்பிட்டள்ளார் (முஸ்லிம்: 1825) என்பதை நினைவு கூருங்கள்.
நமக்கு பொது வாழ்வில் நேர்மை வேண்டும். சம சேவை செய்யும் நேயம் வேண்டும் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்களை முன்னோடியாய் நிலைநிறுத்திச் செயலாற்றுங்கள். இஸ்லாத்தை - இஸ்லாமிய கலாசாரத்தை – பொதுநலத்தை - சமூக மேம்பாட்டை - மனித நாகரீகத்தை காக்க வேண்டுமென்ற தலைமைக்குரிய பொறுப்போடும் அதன் இருப்பு குறித்த விழிப்புணர்வோடும் எங்கள் சமூகத்திற்கு ஓர் ஆரோக்கியமான அரசியலை நீங்கள் செய்து காட்டுங்கள். இருளில் உறங்கி கதிர்விடிவில் வார்த்தை மாறுவதும், கண் முன் கனவு காண்பது போல் ஏழைகளிடம் செயற்கையாய்ச்;; சிரிப்பதும், பதவி கண்டதும் பிறரைப் பராமுகமாய்ப்; பார்ப்பதும், தான் ருசிக்கும் திருப்தியில் பிறர் பசி உணராமல் கொழுப்பதும், ஆதிக்க போதையில் அடங்கிக் கிடந்து பின்; அற்ப சொற்ப அதிகாரத்தில் சோரம் போவதும், வியர்வை சிந்தாமல் சம்பாதித்த காசு கிடைத்த சந்தோசத்தில் அல்லாஹ்வை மறப்பதும் மக்களை மேம்படுத்தும் அரசியலை இஸ்லாம் கண்டிக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஆனால் அரச ஆட்சியில் அங்கம் வகிக்கும் நீங்கள் அதிகமதிகம் விழிப்புணர்வோடு செயலாற்ற வேண்டும் என்பதை மனங்கொள்ளுங்கள். உங்கள் பக்கத்தில் வருவோரை போவோரை மட்டுமல்ல நம் முன்னால் இருக்கின்றவர்களுடைய மன ஓட்டத்தையும் வாசிப்பதுதான் விழிப்புணர்வு என்று புரிந்து கொண்டீர்களென்றால் வாழ்க்கையில் நீங்கள் ராஜாவாவதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் அத்தகைய விழிப்புணர்வுக்குச் செல்ல வேண்டுமென்றால் சில பல விசயங்களில் வெளிச்சத்தை நம்முடைய ஆத்துமாவோடு பாய்ச்சத் தெரிந்திருக்க வேண்டும்;.
உங்களுக்குப் பின்னால் நிற்பவர்களைத்தான் நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். உங்களை எப்படிக் குறை சொல்வது? நீங்களெல்லாம் உங்கள் நகர வாழ்க்கையில்தானே நாட்டம் செலுத்தினீர்கள். 'முத்தெடுக்க மூழ்குகினோம்: மூச்சுத் திணறினோம் கடைசியில் கிழிஞ்சல்கள்தான் கிடைத்தன' என்றுதானே நீங்கள் பேட்டி கொடுத்தீர்கள்.
'இப்போது நாங்கள் நல்லாட்சி செய்கிறோம'; என்கிறீர்களே... நல்லாட்சி என்றால் என்ன என்று மக்களுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்ல முடியமா உங்களால்? ஆங்காங்கே இன்னும் ஆடு மாடு ஹலால் எதிர்ப்பு எனவும் மதரஸாக்களையும் பள்ளிகளையும் சில பல சீருடை இனவாதிகள் மூடுவதையும் முன்னின்று கோஷம் போடுவதையும் குர்ஆனைத் தடை செய்ய வேண்டுமென்று வெறி பிடித்துக் கத்தியதையும் 'முஸ்லீம்கள் இந்நாட்டில் இப்போது பயங்கரவாதிகளாய் பரிணமித்துள்ளார்கள்' என்று கத்துவதையும் உங்கள் செவிகளில் கேட்கதேயில்iயா? நாட்டின் நாற்திசைகளிலும் பரஸ்பரம்- சமரசம் எங்கே நிகழ்கின்றது என்று சொல்லுங்கள்? இலங்கையில் எந்த ஒரு தனி மனிதனாவது மணிக்கொரு தரமாவது இனவாதிகளால் மதரீதியாகவோ அல்லது இனரீதியாகவோ நிந்திக்கப் படுகிறான் என்பது வெளி வருவதில்லை இவற்றை உணர்வு பூர்வமாக அறிவீர்களா நீங்கள்? இவற்றில் எவற்றை தடுத்து நிறுத்த முடிந்தது உங்களால்? ஒன்றை மாத்திரம் உரத்துச் சொல்கிறோம் கேளுங்கள்: இலங்கையில் நீங்கள் எந்த ஆட்சியில் அங்கம் வகித்தாலும் எந்த அரசாங்கமும் உங்களை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப் போவதுமில்லை. இஸ்லாம் அனுமதிக்காத உங்கள் சுயநல அரசியல் நியாயத்தை அல்லாஹ் ஒரு போதும் விட்டு வைக்கப் போவதுமில்லை. ஈமான் கொண்டவர்களே நீங்கள் அல்லாஹ்வுக்க வழிபடுங்கள். இன்னும் இறைத்தூதருக்குக் கீழ் படியுங்கள், உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள் (அல்குர்ஆன் 47:33)
சார் சின்ன திருத்தம், முஸ்லிம் அரசியல் வாதிகள் என்பதை விட "முஸ்லிம் அரசியல் வியாபாரிகள்" என்பது நன்றாக இருக்கும் என நம்புகிறோம்.
ReplyDeleteஇன்னும் ஒரு திருத்தம் mr.kuruvi அரசியல் விப.....ரி என்பதுதான் பொருத்தம்.மனிதன் உடை அணிவது மானம் ரோசத்துக்குதான் ஆனால் நம்மவர்களுக்கு அதுதான் இல்லையே.
ReplyDeletePolitical portfolio is like bed of prostitute, can be changed any time.
ReplyDeleteஒருவன் "நாரே தக்பீர்" சொல்ல "அழ்ழாஹு அக்பர்" முழங்க மட்டும் தானே சமூகம் இருக்கிறது.
ReplyDelete