"கடமை நிறைவேற்று அதிபர்களுக்கான, நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்ளல்"
எமது நாட்டின் யுத்த சூழ்நிலைக் காலம் தொடர்ந்து சமாதானக்கால ஆரம்பம் தொட்டு பல்வேறு ஆபத்துக்கள், அச்சுறுத்தல்கள், கஷ்டங்கள், சுமைகள், வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் எமது சமூகத்தின் இருப்பிடத்தினையும், இளம் சமூகத்தின் கல்வியையும், எதிர்காலத்தினையும் கருத்தில் கொண்டு பலர் பின்நின்ற காலத்தில் எமது முஸ்லிம்,தமிழ் பாடசாலைகளை சமூக உணர்வோடும், தத்துணிவுடனும், பொறுப்பேற்று பல சவால்களுக்கு முகம் கொடுத்து இப்பாடசாலைகளை வளர்த்து சாதனைகள் பல படைத்து வரும் மதிப்பிற்குரிய அதிபர்கள் அனைவரும் இன்று வரையில் கடமைநிறைவேற்று அதிபர்களாகவுள்ளதை முதலில் தங்களின் மேலான கவனத்திற்கு முன்வைக்க விரும்புகின்றேன்.
நாடளாவிய ரீதியாக இறுதியாக இடம்பெற்ற கடமைநிறைவேற்று அதிபர்களுக்காக (2013) விதிக்கப்பட்டிருந்த கால எல்லையானது 2008.01.01 முதல் மூன்று வருடகால சேவையை நிறைவேற்றியோர் என்ற நிபந்தனையின் கீழ் 2010.012..31இல் மூன்று வருடங்கள் சேவையை நிறைவேற்றியோர் மட்டும் நியமனத்திற்காக (2012 ஒக்டோபர்-டிசம்பர்) அழைக்கப்பட்டிருந்தனர்.
2012ல் இடம்பெற்ற இந்த நியமனத்திற்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்ற (2012 ஒக்டோபர்-டிசம்பர்); போது மூன்று வருடங்களுக்கும் மேல் சேவையில்; இருந்த அதிபர்கள் பலர் 2008 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் கடமைகளை பொறுப்பேற்றவர்களாக உள்ளபடியினால் நேர்முகப்பரீட்சை இடம்பெற்றபோது (2012,2013) ஆண்டளவில் 3,4,5 வருட சேவையில் இருந்தும் நேர்முகப்பரீட்சைக்கும் நியமனத்திற்கும் உள்வாங்கப்படாத நிலையில் இன்றுவரை கடமைநிறைவேற்று அதிபர்களாக சேவையாற்றிவருவதுடன், 2015ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் புதியவர்கள் கடமைநிறைவேற்று அதிபர்களாக நியமக்கப்பட்டு பாடாசலைகளை நடாத்தி வருகின்றமையையும் தங்களுக்கு அறியத்தரவிரும்புகின்றேன்.
நியமனத்திற்காக கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட கால எல்லைகளை தமிழ், முஸ்லிம்களின் இடப்பெயர்வும் மீள்குடியேற்றமும், நல்லினக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள், நேர்முகப்பரீட்சை இடம்பெற்ற காலம், நியமனத்தின் போது வழங்கப்பட்ட முஸ்லிம்,தமிழ் அதிபர்களின் எண்ணிக்கை, வீதாசாரம் என்பவற்றைக் கருத்தில் கொண்டும், மேலும் 2015ஆம் ஆண்டு புதிய அதிபர் தர பரீட்சையின் நிபந்தனைகளின் படி சிலர் வயது எல்லை உயர்வாகவும், பரீட்சைக்கு தோற்றாமலும், பெறுபேறுகள் சகலருக்கும் பாதகமாக அமைந்தமையினாலும் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதை வேதனையோடு அறியத்தருவதுடன், இது தொடர்பில் தங்களின் சிறந்த சிந்தனையையும் சாதக வழிகளையும் உற்படுத்தி இவ் அதிபர்களுக்கான நிரந்தர நியமனத்தினையும், அதிபர் சேவைத்தரத்தினையும் பெற்றுக்கொள்ள ஆவனம் செய்வீர்கள் எனவும் கடமைநிறைவேற்று அதிபர்கள் தங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையயில் தங்களிடம் முன்வைக்கும் இக்கோரிக்கைக்கு விரைவான நடவடிக்கையினை மேற்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை சகல அதிபர்களுக்கும் உள்ளதை தங்களுக்கு மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் தெரிவித்து சகல அதிபர்கள் சார்பான நன்றிகளையும் கூறி பணிவன்பாக இக்கோரிக்கையினை முன்வைக்கின்றேன்.
-நன்றி-
இப்படிக்கு
உண்மையுள்ள,
பிரதிகள்:
சகல கடமை நிறைவேற்று அதிபர்கள், புத்தளம், முசலி, மன்னார்.
Post a Comment