Header Ads



காதலர் தினம் இஸ்லாத்தை அவமதிக்கும் செயல், கொண்டாடவும் தடை - பாகிஸ்தான் அதிரடி

பிப்ரவரி 14–ந் தேதி காதலர் தினம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இது சம்பந்தமாக உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இதற்கு அனுமதிக்க முடியாது. இதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான கோப்பு உள்துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. காதலர் தினம் தடை தொடர்பாக அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படாது. அதே நேரத்தில் நகர நிர்வாகங்களுக்கு நேரடி உத்தரவு பிறப்பித்து அவர்கள் மூலம் தடை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.