Header Ads



ஐரோப்பாவிற்குள் வந்தது சிகா - உறுதி செய்தது ஸ்பெயின்

கர்ப்பிணி பெண் ஒருவருக்கு சிகா வைரஸ் தொற்றியிருப்பதாக ஸ்பெயின் உறுதி செய்துள்ளது. ஐரோப்பாவில் இவ்வாறு நோய் தொற்றி இருப்பது இது முதல் முறையாகும். கொலம்பியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய பெண்ணுக்கே இந்த வைரஸ் தொற்றியிருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காஸ் நாடுகளில் பரவி இருக்கும் சிகா வைரஸ் காரணமாக பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி இன்றி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பும் சிரிய தலையுடன் குழந்தைகள் பிறப்பதை சிகா வைரஸுடன் தொடர்பு படுத்தி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் தொடர்பில் உலக சுகாதார அனர்த்த நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு கடலோனியா பிராந்தியத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்றியிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் சுகாதார அமைச்சு அந்த பெண் குறித்த விபரங்களை வெளியிடவில்லை. ஸ்பெயினில் இதுவரை சிகா வைரஸ் எழுவருக்கு தொற்றியதாக உறுதியாகியுள்ளது.

இவர்கள் அனைவரும் நல்ல உடல்நிலையில் இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும் நாட்டுக்குள் இந்த வைரஸ் பரவும் அபாயம் குறைவு என்றும் சுகாதார அமைச்சு உறுதி அளித்துள்ளது.

No comments

Powered by Blogger.