பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிட்ட காதலன், ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலைசெய்த காதலி
பிரித்தானிய நாட்டில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் எந்த நேரமும் மூழ்கி இருந்த காதலனின் செயலால் ஆத்திரம் அடைந்த காதலி, அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Lancaster என்ற நகரில் Terri-Marie Palmer(23) என்ற பெண் ஒரு முடி திருத்தும் நிலையம் ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.
இந்த நிலையத்திற்கு முடி திருத்தம் செய்வதற்காக Damon Searson(24) என்ற நபர் அடிக்கடி சென்றபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
பின்னர், இருவரும் ஒரே வீட்டில் குடியேறலாம் என முடிவு செய்து Heysham என்ற பகுதியில் ஒரு வீட்டை பார்த்து குடியேறியுள்ளனர்.
காதலிக்கு சொந்தமாக நிலையம் இருப்பதால் அதில் வரும் வருமானத்தை வைத்து வீட்டு வாடகை செலுத்தி வந்துள்ளார்.
ஆனால், காதலன் ஈட்டும் வருமானத்தை கொண்டு ஆடம்பரமாக செலவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், ஒரு நாள் ஊதியம் வந்தவுடன் அதை பயன்படுத்தி விலையுயர்ந்த கைப்பேசி ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த கைப்பேசியை வாங்கிய பிறகு, அவருக்கு காதலியுடன் பேச நேரமே இல்லாமல் போக, எந்த நேரமும் பேஸ்புக்கில் மூழ்கி இருந்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், தனக்கு அறிமுகம் இல்லாத பெண்களை தனது பேஸ்புக் கணக்கில் ’தோழிகளாக’ சேர்த்து வந்துள்ளார். இது காதலியை பெரும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதுபோன்ற ஒரு சூழலில், கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் திகதி நள்ளிரவு காதலி தனது காதலனுடன் பேச்சுக்கொடுத்துக் கொண்டுருந்துள்ளார்.
ஆனால், காதலியின் பேச்சை கேட்காமல் அவர் பேஸ்புக்கில் மூழ்கியுள்ளார். காதலனின் செயலை கண்டு காதலிக்கு கோபம் உச்சத்தில் ஏறியுள்ளது.
காதலனிடமிருந்து கைப்பேசியை பறித்து தூக்கி வீச, இருவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது.
காதலின் செயலால் பல நாட்களாக கோபத்தில் மூழ்கிருந்த காதலி, அருகில் கிடந்த ஒரு கத்தியை எடுத்து காதலனின் மார்பில் பாய்ச்ச, அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அறிந்து பொலிசார் காதலியை கைது செய்தபோது. ‘எதிர்பாராத ஒரு விபத்தில் இந்த சம்பவம் நடந்ததாக’ காதலி நாடகமாடியுள்ளார்.
ஆனால், பொலிசாரின் விசாரணையில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு வந்தபோது, காதலிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Post a Comment