இறைவனிடம் சொல்லப்போகும் பந்துல, அரசின் அநியாயங்களுக்கு எதிராக சாபமிடவும் தீர்மானம்
தற்போது நாட்டில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் கூற, பிறிதொருவர் இல்லாமையால் இறைவனிடம் சொல்ல தீர்மானித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பெப்ரவரி 6ம் திகதி சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்து, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அநியாயங்களுக்கு சாபமிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு எனப்படும் எப்.சீ.ஐ.டி சட்டவிரோதமானது எனவும், அரசியலமைப்புக்கு முரணானது எனவும் நிபுணர்களான பேராசிரியர் ஹலோ பொன்சேகா மற்றும் எல்கே குணவங்ச தேரர் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
எனினும் குறித்த மனு தொடர்பில், இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment