பௌத்த சமயத்தின் முக்கியத்துவத்தை, அரசியல் அமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துவேன் - ரணில்
-JM.HAFEEZ-
மகாநாயக்த்தேரர்களது ஆலோசணையின் அடிப்படையிலே பௌத்த மதகுருமாhர் தொடாபான சட்டமூலங்களை தயாரிக்க உள்ளதாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்கள் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்த் தேரர்களைச் சந்தித்த போது தெரிவித்தார். (13.2.2016 மாலை) பௌத்த பிக்குகள் தொடர்பான சட்ட மூலத்தை மகாநாயக்கத் தேரர்களது 'சங்க' சபைகளின் தேவையின் அடிப்படையிலே முன் எடுக்கப்படும் என மல்வத்தை மகாநாயக்கத்தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள சித்ததாhத்த, மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் கலகம ஸ்ரீ அத்த டஸ்சி ஆகியோர்களைச் சந்தித்து நல்லாசி பெற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-
மேற்படி பௌத்த மதகுருமார் தொடர்பான உரிய விடயங்களை, பௌத்த மதகுருக்களுக்கு தேவையான விதத்தில் கலந்தாலோசித்து பாராளு மன்றில் சமர்ப்பிப்பதற்கான பிரேரணையை மேற்கொள்வது மட்டுமே எம்மால் ஒழுங்கு படுத்தப்படும் என்றார்.
எதிர்வரும் மார்ச் மாதம் அலரி மாளிகையில் இடம்பெற உள்ள பௌத்த துறவிகள் ஆயிரம் பேருக்கு தானம் வழங்கும் நிகழ்வு தொடர்பாக மகாநாயக்த்தேரர்களுக்கு அழைப்பு விடுக்க தான் சமூகமளித்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்.
தேசிய அபிவிருத்திகளை திட்டமிடும் போது அந்தந்த பிரதேச அமைச்சர்கள், மகாண சபை அங்கத்தவர்கள், முதலமைச்சர்கள், போன்ற மக்கள் பிரதிநிதிகளின் கமிட்டி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பிரச்சினைகளையும், சிக்கள்களையும் கலந்துரையாடி இறுதி அறிக்கைபெற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே அதற்காக மாகாண மட்டத்தில் கூட்டங்களை நடத்த உள்ளதாகவும் கூறினார்.
கண்டி நகர அபிவிருத்தி தொடர்பாகவும் மகாநாயக்கத் தேரர்களை தெளிவு படுத்தினார். ஐ.தே.க. அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்றும், மத்திய அரசு, மற்றும் மகாண அரசு என்று பிரிந்து செல்லாது கொள்கையின் அடிப்படையில் இணைந்து செயலாற்றுவது முக்கியம் என்றும் கூறினார்.
பௌத்த சமயத்தின் முக்கியத்தவத்தை அரசியல் அமைப்பு ரீதியாக உரிதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக சகல சந்தர்ப்பங்களிலும் மகாநாயக்கத் தேரர்களது ஆலோசனையை கருத்திற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்hர்.
இச்சந்திப்பின் போது அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த நிர்வாக சபை அங்கத்தவர்களான 'சங்க' சபை பிரதிநிதிகளான ஆனமடுவே தம்மதஸ்சி, மெதகம தம்மானந்த, கொடகம மங்கள, கும்புக்கந்தன்வெல பஞ்ஞாரத்ன, நாரம்பனாவே ஆனந்த முதலான தேரர்களும் அமைச்சர்களான மலீக் சமரவிக்ரம, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
Post a Comment