Header Ads



சரத் பொன்சேக்காவை கடுமையாக, விமர்சிக்கும் கோட்டாபய ராஜபக்ஷ

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளது இடது - வலது என கூறி ஆணையிட்டதற்கு மேலாக வேறெதும் திறமை இருப்பதாலா என, கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முடிந்தது வலது - இடது என கூறி இராணுவத்துக்கு ஆணையிடுவது மட்டுமே எனவும், அரசியல் கண்ணோட்டம் இல்லை எனவும், இந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் கருத்து வௌியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா என்பவர் கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் எனவும், அவருக்கு பாராளுமன்ற பதவியை வழங்குவது தனக்கு பிரச்சினை இல்லை எனவும், அது அரசியல் கட்சி மூலம் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மல்வத்து அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த பின் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இலங்கையிலேயே 28000 வாக்குகளை மட்டும் பெற்ற பொன்சேகாவை பாராளுமன்ற உறுப்பினராக்குவது அந்தக் கட்சிக்கு பிரச்சினை இல்லையாயின் தனக்கும் பிரச்சினை இல்லை எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தில் கோட்டாபயவுக்கு தெரிந்தது வலது - இடது மட்டுமே என கூறியவர்கள் பொன்சேகாவுக்கு அதற்கு மேலதிகமாக தெரியும் என நம்பவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியல் கட்சிக்கான தேவை, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது தோன்றியுள்ளதாகவும், அவ்வாறானதொரு கட்சியை தோற்றுவிக்க தான் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. உமக்கு என்ன தெரியும். கடத்து கப்பம் இல்லையென்றால் கொண்று புதை.இதைதானே கடந்த ஆட்சியில் நீ ஆடியது. உம்மிடம் யார் கேட்டா சரியா பிழையா என்று

    ReplyDelete
  2. திரு. கோத்தா,

    இடம் வலம் சொல்லும் தகுதி மட்டுமல்ல - தெற்காசியாவே கண்டிராத ஊழல்மிகுந்ததும் எதேச்சாதிகாரம் மிக்கதுமான ஒரு குடும்ப ஆட்சியின் அராஜகங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் தலைவணங்காமல் துணிந்து எதிர்த்து நின்றவர் பொன்சேகா. அந்தத் தகுதியே அவருக்குப் போதும்!

    ReplyDelete
  3. Mr family worried about s.foseka.if he become minister they will face more trouble in the future.worries thats why

    ReplyDelete

Powered by Blogger.