Header Ads



விஷகிருமிகளுக்கு ஒருபோதும், நான் அஞ்சப்போவது இல்லை - எஸ்.பி.

சுதந்திர கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற சில விஷமிகள் சதி முயற்சியில் மும்முரமாக  ஈடுப்பட்டுவருவதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

கட்சியின் உறுப்பினர்களை வெளியேற்றி சுதந்திரக்கட்சியினை பிளவுப்படுத்த எந்தவொறு தரப்பினருக்கும் அனுமதியளிக்கப்போவது இல்லை. இதனிடையே எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் ஒன்றினைந்து தேர்தலில் போட்டியிட தற்போதுவரை 17 கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிகாட்டினார்.

ஹட்டன் லக்ஷபான பகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஸ்ரீ லங்கா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான எஸ்.பீ.திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உட்பட கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்தின் அடிபடையில் நான் எனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் பட்சத்தில் இதனை சகித்துக்கொள்ள முடியாத சில விஷமிகள் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் சில சதி திட்டங்கள் மூலமாக என்னை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.

இந்த விஷகிருமிகளின் மறைமுகமான செயற்பாடுகளுக்கு நான் ஒரு போதும் அஞ்சப்போவது இல்லை. அந்தவகையில் இன்று அரசியல் அநாதைகளாகவும் கடந்த பொது தேர்தல்களின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட சில கட்சிகளின்  உறுப்பினர்களினாலேயே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ்வாறான தரப்பினர்களினால் எனக்கு எதிராகவும் எமது கட்சிக்கெதிராகவும் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சி வேளைகளில் கட்சிக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட முடியாது அந்தவகையில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க நினைப்பவர்களுக்கு அது கனவாகவே அமையும் என குறிப்பிட விரும்புகின்றேன்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் ஒன்றினைந்து போட்டியிடுவதற்கு இதுவரை 17 கட்சிகள் முன்வந்துள்ளது. அந்தவகையில் கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த செயற்றிட்டங்கள் மூலம் எதிர்வரும் அனைத்து பொது தேர்தல்களிலும் மக்களின் பேராதரவை பெற்று வெற்றியிட்டுவோம் என்றார்.

No comments

Powered by Blogger.