Header Ads



அமெரிக்க ஜனாதிபதியாக எவர் வந்தாலும், இலங்கை தொடர்பில் மாற்றமில்லை

அமெரிக்காவில் வரும் நொவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் பின்னர், சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார், அமெரிக்காவுக்கான சி்றிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம்.

”புதிய அதிபரின் பதவிக்காலத்தில், சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்க கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படாது.

ஒவ்வொரு அதிபர் தேர்தலின் பின்னரும், அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை.

இதுவரையில் அவ்வாறான நிலை இருக்கவில்லை. இந்த நிலையான கொள்கையில் இந்த ஆண்டு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை.

ஜனநாயக கட்சியின் முன்னணி வேட்பாளராக உள்ள ஹிலாரி கிளின்டனோ, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்போ, யார் வெள்ளை மாளிகைக்குத் தெரிவு செய்யப்பட்டாலும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற சிறிலங்கா ஆர்வமாக இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.