Header Ads



சிறுபான்மை சக்திகளை திரும்ப கொண்டுவந்த நான், வடகிழக்கு இணைப்பை அனுமதிக்கமாட்டேன் - மைத்திரி

SLFP பியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரி கடந்தவாரம் கொழும்பிலுள்ள மகாவலி மையத்துக்கு சென்றார். எஸ்.எல்.எப்.பியின் போஷகர் மகிந்த ராஜபக்ஸ அங்கு சமூகமளிக்காத போதிலும் அவரது மகன் நாமல் ராஜபக்ஸ மற்றும் மகிந்தவின் சகோதரர் சாமல் ராஜபக்ஸ முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன மற்றும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கு பல உறுப்பினர்களும் அங்கு சமூகமளித்திருந்தார்கள். ஜனாதிபதி தனது பேச்சின்போது “இந்தக் கட்சி உங்களால் என்னிடம் தரப்பட்டது. மற்றும் அது எனக்கு எதிராக எந்த வைராக்கியமும் பாராட்;டாது நல்ல நோக்கத்துடனேயே ஒப்படைக்கப்பட்டதாக நான் நம்புகிறேன். கடந்த வருடம், தங்களை கடந்த ஒரு தசாப்தமாக கட்சியில் இருந்து தூரமாக்கி வைத்திருந்த சிறுபான்மை சக்திகளை திரும்பவும் கட்சிக்குள் கொண்டுவர என்னால் முடிந்தது”. எனத் தெரிவித்தார்.

அவர் பேசும்போது அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரா எழுந்து நின்று மைத்திரி அவரது பேச்சில் மூன்று விடயங்களுக்கு பதிலளிப்பார் எனத் தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அவையாவன புலனாய்வு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருப்பது, அரசாங்கத்தின் இராணுவப் படைகளைப் பற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணை, மற்றும் மூன்றாவதாக பிரேரிக்கப் படவுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு நாட்டின் ஒற்றையாட்சிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என எழுந்திருக்கும் கவலைகள்.

சரத் வீரசேகராவின் மூன்று கேள்விகளுக்கும் மைத்திரியினால் உடனடியாக விரிவான பதில் வழங்கப்பட்டது. “ பல்வேறு தரப்பினரும் பல்வேறு விடயங்களை, அவை நடைமுறைக்கு சாத்தியமானதா என்பதைப் பற்றி சிந்திக்க ஒரு நிமிடம் கூட ஒதுக்காமல் சொல்வார்கள். ஒரு விடயத்தை என்னால் உங்களுக்கு உறுதிப்படுத்த முடியும். நான் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் காலம் வரை, இந்த நாட்டின் ஒற்றை ஆட்சி முறைக்கோ அல்லது வேறு எதற்கும் தீங்கு செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டேன். மேலும் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பையும் நான் அனுமதிக்க மாட்டேன். ஆனால் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நாங்கள் ஒரு புதிய அரசியலமைப்பை கட்டாயம் கொண்டுவர வேண்டியுள்ளது மற்றும் அது அந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை வழங்க வேண்டும். ஒரு சிலர் புதிய அரசியலமைப்பு தீமையான ஒன்று என பிரதானப் படுத்தினாலும் அதைக்கண்டு யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை” என அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவ படைகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளபோது, அதற்கான சிறந்த பரிகாரம் அதைப்பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியதே என்றார். “இந்தக் குற்றச்சாட்டுகள் முதலில் எழுந்தபோதே முன்னைய அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் விஷயம் இந்தளவுக்கு மோசமாகி இருந்திருக்காது. விஷயங்களை மறைப்பதற்கு முயற்சிப்பதால் நல்லது எதுவும் நடக்கப் போவதில்லை, மாறாக அமெரிக்கா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகள், எங்கள் படைகளுக்கு வழங்கும் இராணுவ பயிற்சிகளை நிறுத்திவிடும். நாங்களும் அதே பாணியில் தொடர்ந்தால்  ஸ்ரீலங்கா இராணுவம் ஒரு சட்டபூர்வமான அமைப்பு என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐநா சொல்லிவிட்டால் என்ன நடக்கும்? அப்போது எங்கள் இராணுவப் படைகளுக்கு என்ன நடக்கும், அதன்பின் நமது நாட்டுக்கு என்ன நடக்கும்? ஆகவே குற்றம்; இழைத்துள்ளார்கள் என நிரூபிக்கப் பட்டவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்தது யுத்தக் குற்றச்சாட்டு பற்றிய விசாரணைகள் முற்றிலும் உள்ளுர் பொறிமுறைப்படியே நடைபெறும் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றம் நாட்டிற்குள் அனுமதிக்கப்படாது என்று. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் அதில் இணைந்து கொண்டு  அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றி சிலர் மக்களிடத்தில் தேவையற்ற பயத்தை பரப்பி வருகிறார்கள் எனக் கருத்து தெரிவித்தார். “இது ஒரு குழந்தை பிறக்கும் முன்பே அதன் வடிவத்தை பற்றி விளக்குவதைப் போலுள்ளது என அவர் சொன்னார். எனினும் இந்த உவமைக்கு பல நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் பதிலளித்தார்கள், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் குழந்தையின் வடிவத்தை மட்டுமல்ல அது ஆணா அல்லது பெண்ணா என்பதைக்கூம தாயின் கருவில் உள்ளபோதே ஒருவரால் தெரிந்து கொள்ள முடியும் என அவர்கள் அவருக்கு நினைவூட்டினார்கள்.

No comments

Powered by Blogger.