கோத்தபாய தப்புவாரா..? சிக்குவாரா..??
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் எதிர்காலம் கேர்ணல் சம்மியின் கைகளில் தங்கியிருப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன.
இந்த சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தொடர்புபட்டிருப்பதற்கான வலுவான சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கேர்ணல் சம்மி ரத்நாயக்க தலைமையிலான உறுப்பினர்கள் மேற்கொண்டதாகவும் இதன் பின்னணியில் கோத்தபாய இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கோத்தபாய இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக கேர்ணல் சம்மி ரட்நாயக்க இதுவரையில் சாட்சியமளிக்கவில்லை.
சம்மி ரட்நாயக்க தலைமையில் இயங்கிய இராணுவப் புலனாய்வுக் குழு நேரடியாக கோத்தபாயவின் கட்டுப்பாட்டில் இயங்கியதாகவும், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் அனுர வன்னியாரச்சியின் கட்டளைகளைக் கூட ஏற்காத வகையில் செயற்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்டவிரோத கைது மற்றும் தடுத்து வைத்தல் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சம்மி ரத்தநாயக்கவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம் இரகசியப் பேரம்பேசல்கள் ஆரம்பித்திருக்குமே..?
ReplyDeleteஇது வழமையான ஒன்று இது முன்னாள் ஜனாதிபதிக்கும் தற்போதைய பிரதமர்குமிடையில் நடைபெறும் வழமையான ஒன்று. இது தாஜுதீன் விவகாரத்திலும் நடப்பெற்ற ஒன்று
Delete