மஹிந்த ஓய்வு பெற்றுக்கொண்டால், சுனாமியில் சிக்கி நிர்க்கதியாகிவிடும் தரப்பு..!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கௌரமான முறையில் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய மாகாண பெருந்தெருக்கள், மின்வலு, வீடமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு இணைய தளமொன்று வீரவர்தனவின் கருத்துக்களை இவ்வாறு பதிவு செய்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு நாளும் பிளவடையாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு இடமளிக்க மாட்டார்.
எனது நம்பிக்கையின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவும் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து புதிய கட்சி அமைக்க மாட்டார்.
கட்சியுடன் தொடர்பு இல்லாதவர்கள் புதிய கட்சி அமைச்சர் மஹிந்த ஒத்துழைப்பு வழங்கினால் அது சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்யும் முயற்சியாக கருதப்பட வேண்டும்.
மஹிந்த நாம் மதிக்கும் ஒர் தலைவாராவார், எனவே சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்யும் பாவச் செயலில் மஹிந்த பங்கேற்க கூடாது.
கௌரமான முறையில் அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டும்.
கட்சியை பிளவடையச் செய்து புதிதாக கட்சி அமைக்கும் எவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களல்லர். சுதந்திரக் கட்சியில் தொங்கி அரசியல் பயணம் மேற்கொண்டவர்களே பதிய கட்சி அமைக்க முயற்சிக்கின்றனர்.
மஹிந்த ஓய்வு பெற்றுக்கொண்டால் இந்த தரப்பினர் சுனாமியில் சிக்கியது போன்று அரசியல் எதிர்காலமற்று நிர்க்கதியாகிவிடுவர் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment