"முஸ்லிம்களது நிலை பற்றி, சிங்கள கல்விமான்கள் கவலை"
முஸ்லிம்
சமூகம் பற்றிய புள்ளிவிபரங்கள் இல்லாமை ஆயுதம் இல்லாமல் யுத்தம் செய்வது
போன்றதாகுமென அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவரும், முன்னாள்
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருமான பேராசிரியர் ஏ.ஜி.ஹுஸைன் இஸ்மாயில்
கூறினார்.
அடுத்த
கால் நூற்றாண்டில் இலங்கை முஸ்லிம்களது கல்வி எப்படி அமையப் போகின்றது
என்பது பற்றி நடாத்தப்படவுள்ள ஆய்வு தொடர்பான முன்னோடிக் கருத்தரங்கில்
தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அகில
இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடும், ராபிதத்துல் நளீமியும் இணைந்து நடாத்தும்
இந்த ஆய்வு தொடர்பான முன்னோடிக் கருத்தரங்கு கொள்ளுப்பிட்டி ரேணுகா
ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இங்கு மேலும் பேசிய பேராசிரியர் இஸ்மாயில்
கூறியதாவது,
இலங்கை முஸ்லிம்கள் பற்றி இதுவரை அதிகாரபூர்வமான ஆவு எதுவும்
நடத்தப்படவில்லை. தவல்கள் உறுதியாக இல்லாமல் முஸ்லிம்கள் பற்றி பலவிதமான கருத்துக்கள் பறிமாரப்படுகின்றன. நாம்
எங்கு இருக்கின்றோம். நாம் நாட்டுக்குச் செத பங்களிப்பு என்ன என்பது பற்றி
உறுதிப்படுத்தும் தகவல்கள் எதுவுமே இல்லை. ஒருமுறை முன்னாள் கல்வி
அமைச்சர் கன்னங்கராவின் நினைவுப் பேருரையை நான் நிகழ்த்தியபோது
முஸ்லிம்களது கல்வி நிலை பற்றி முன்வைத்த தகவல்களைக் கேட்ட சிங்கள
கல்விமான்கள் இந்த விபரங்கள் எங்களுக்குத் தெரியாதே இது உண்மையாக இருந்தால்
நிலமை கவலைக்குரியது எனத் தெரிவித்தார்கள்.
அமெரிக்காவிலிருந்து
முஸ்லிம்களை வௌியேறுமாறு ஜனாதிபதி அபேட்சகர் ஒருவர் கேட்டதும் இப்போது
முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குச் செய்த பங்களிப்பு என்ன என ஆவு
நடாத்துகிறார்கள். அமெரிக்காவில் இந்தியர்களே தகவல் தொழில்நுட்பத்துறையில்
முக்கியமாக ஈடுபடுபடுகிறார்கள். அவர்களை வௌியேற்றினால் அமெரிக்காவே
வீழ்ச்சி கண்டுவிடும்.
இன்று
முஸ்லிம் மாணவர்கள் எத்தனையோ பேர் பாடசாலைகளுக்குச் செல்கிறார்களில்லை.
பேருவளையில் நடத்திய ஆய்வொன்றின் போது 9 பிள்ளைகள் பாடசாலைக்குச்
செல்கிறார்களில்லை எனத் தெரியவந்துள்ளது. ஏனைய பிரதேசங்களில் நிலைமை
எப்படியிருக்கும் பல்கலைக்கழக அனுமதியில் 70 சதவீதமான முஸ்லிம்கள்
கலைப்பீடத்துக்கே அனுமதிக்கப்படுகிறார்கள். விஞ்ஞான பீடங்களுக்கு மூன்று
நான்கு சதவீதமானவர்களே அனுமதி பெறுகிறார்கள்.
நாட்டில்
பல்கலைக்கழகங்கள் தவிர்ந்த 1310 அரச கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இதில்
எத்தனை முஸ்லிம் மாணவர்கள் இருக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் ஒரு
சிலவற்றில் ஒரு முஸ்லிம் மாணவர்கள் கூட இல்லை.
இஸ்ரேலில்
ஆராச்சிக்கு 2.7 சதவீதம் நிதி ஒதுக்கப்படுகின்றது. அரபு நாடுகளில் மிகக்
குறைந்த நிதியே ஒதுக்கப்படுகின்றது. சவூதிஅரேபியாவில் 0.4சதவீதமே
ஆராச்சிக்கு ஒதுக்கப்படுகின்றது. சவூதி அரேபியாவிலிருந்து அமெரிக்க
சென்றுள்ள ஆராச்சியாளர்களில் 45 சதவீதமானோர் நாடு திரும்பாது அங்கே
தங்கியிருக்கிறார்கள். இது முஸ்லிம் நாடுகளின் நிலை.
எமக்கு
நடக்கும் அநீதிகளை எடுத்துக் கூறுவதற்கு ஆய்வுத் தகவல்கள் இன்றியமையாதது
எனவேதான் நாம் கல்வித் துறையில் சில தலைப்புக்களில் இந்த ஆய்வினை
நடத்தவுள்ளோம். புள்ளிவிபரங்களைத் திரட்டி ஒரு பாரிய திட்டத்தை தயாரித்து
எமது தேவைகளை அரசுக்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் முன்வைக்கவுள்ளோம்.
மத்ரஸாக்
கல்வி தொடர்பாகவும் ஆய்வு நடாத்தப்படவுள்ளது. 150 வருடங்களாக ஒரே
பாடநெறியில் மத்ரஸாக்கள் இயங்குகின்றன. ஆகக் கூடுதலான இடைநடுவில்
வௌியேறுவது மத்ரஸாக்களிலே இடம்பெறுகின்றது.
ஆரம்ப
அமர்வில் சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.எச்.எம்.நவவி,
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அங்கத்தவர் டாக்டர் உவைஸ் ஹனீபா, திருமதி
ஜெஸீமா இஸ்மாயில் பொறியியலாளர்களான அகாபாரி, அல்துல் றஹ்மான் ஆகியோரும்
உரையாற்றினர்.
முஸ்லிம்கள் சார்ந்த ஒரேயொரு
ReplyDeleteபுள்ளிவிபரம் மட்டும் மிதப்பில் தயாராக இருக்கிறது. அதுதான், நாட்டில் சிறுபான்மையாக இருக்கின்ற முஸ்லிம்கள் தான் சிறைச்சாலைகளில் அதிக விகிதாசாரத்தை பிடித்திருக்கிறார்களாம்.
Yes of course all of our scholars should participate in this important task. Jazakallahu Khair.
ReplyDeleteYaa Allah make This programme very succesful
ReplyDelete