Header Ads



சிரியா யுத்த நிறுத்தம் சாத்தியமா..? பிண்ணனி என்ன..??

'அய்யாஷ்'

மனிதாபிமானம் இராணுவத்திடம் எதிர்பார்க்க முடியாத ஒன்று . அதேபோல ஏகாதிபத்தியங்களிடம் கருணை காருண்யம் என்பதெல்லாம் ஏட்டில் எழுதிய சுரைக்காய்தான்.  சாம்பார்  போல  சிரியா நெருக்கடி  மிக்ஸ் பண்ணப்பட்டுள்ளதால் என்ன  இராணுவ, என்ன அரசியல் தந்திரம் கையாள்வது என்பது இன்றுவரை அமெரிக்காவுக்கு உள்ள மிகப்பெரிய தலை இடி.
 
சிரியா பிரச்சினையில் என்ன செய்வது ?எந்தப்பக்கம் சாய்வது? இவை  ஆரம்பத்தில் இருந்தே ஒபாமா நிர்வாகத்தை  தலை முடியைப் பிய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நெருக்கடி. ஆரம்பத்தில் அசாதுக்கு எதிராக வரிந்து  கட்டிக் கொண்டு நின்ற  அமெரிக்கா, எப். எஸ். ஏ(FSA) உட்பட  மிதவாதம் இல்லா  போராட்ட அமைப்புக்களுக்கு  ஆயுதங்களும், ஆயுதப்பயிற்சியும் வழங்கி மில்லியன் கணக்கில்  டொலர்களை எரித்துத்  தள்ளியது . எதிர்பார்த்த பலன் அமெரிக்காவுக்கு கிடைக்கவிலலை .எஞ்சியதெல்லாம்  ஏமாற்றமும் உள்ளூர் அரசியல் நெருக்கடியும்தான் .

ஐ எஸ் அமைப்பின் செல்வாக்கு சிரியாவில் மாத்திரமல்ல ஈராக்கிலும் பல்கிப்பெருகிய போது அது தொடர்ச்சியாக பெருந்தொகையான நிலப்பகுதிகளை கைப்பற்றியது . சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள முக்கிய நகரங்கள் அடுக்கடுக்காக ஐ எஸ் வசமான போது அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் உஷார் அடைந்தன .இன்னொரு பக்கம் அல் கைதா சார்பான அல் நுஸ்ரா அமைப்பின் எழுச்சியும் அமெரிககாவுக்கு கசப்பான உணர்வை ஏற்படுத்தியது .

அசாத் ஆட்சியில் இருந்தாலும் பரவாயில்லை ஐ எஸ்  மற்றும் 'தீவிரவாத' அல் நுஸ்ரா,அஹ்றார் அல்  ஷாம் போன்ற அமைப்புகள்  அழிக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் நிலைப்பாடுகள் மாறின . ஐ எஸ் அமைப்போடு தீவிரமாக   போராடும் படி அமெரிக்காவினால்  பயிற்றுவிக்கப்பட்ட, ஆயுதங்கள் வழங்கப்பட்ட  தீவிரமற்ற போராட்ட அமைப்புகள் மீது அமெரிக்கா நிர்ப்பந்தித்தது

ஐ எஸ் அமைப்பை விட அசாத்தை ஆட்சியில் அகற்ற வேண்டும் என்பதை முன்னுரிமையாக  கொண்ட அந்த சிரிய போராட்ட அமைப்புகள்,  அமெரிக்கா எதிர் பார்த்தபடி செயற்படவில்லை . இந்த நிலையில் வட சிரியாவில் உள்ள ypg /pyd போன்ற குர்திஷ் ஆயுத குழுக்கள் ஐ எஸ்ஸுக்கு எதிராக  போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன .

அந்த அமைப்புகள் கோபாணி நகரில்  ஐ எஸ் அமைப்பின் முற்றுகையை முறியடித்ததில் வெற்றி கண்டதை அடுத்து அமெரிக்காவின் நம்பத்தகுத்த பங்காளி ஆகின .

சிரியாவில் உள்ள தீவிரமற்ற ஆயுத குழுக்களை விட வட சிரியாவில் உள்ள ypg /pyd போன்ற குர்திஷ் ஆயுத குழுக்களை அமெரிக்கா கடுமையாக நம்பியது . அவர்கள் ஹசக்கா மற்றும் தல் அபித் ஆகிய பகுதிகளில் ஐ எஸ் போராளிகளை விரட்டியமை  ஐ எஸ்ஸுக்கு   எதிரான போராட்டத்தில் அமெரிககாவுக்கு நம்பத்தகுந்த பலமான பங்காளியை உருவாக்கி இருந்தது ஆயுதங்களை அள்ளிக்கொட்டியது .கேட்டவுடன் விமான மூலமான உதவிகள் தாக்குதல்கள் ,தொடர்பாடல் வசதிகள் என அந்த அமைப்புகள் இராஜபோகத்தை அமெரிக்காவிடம் இருந்தும் மேற்கு நாடுகளிடமும் இருந்து அனுபவித்தன .

இது துருக்கியை முகம் சுளிக்க வைத்த போதும் ஐ எஸ் சை முறியடிப்பது என்பது அமெரிககாவின் முக்கிய நோக்கமாக கருதப்பட்டதால் துருக்கியின் இந்த அதிருப்தி குறித்து அலட்டிககொள்ளவில்லை அமெரிக்கா ..  ஒருவேளை  துருக்கியை தனிமைப்படுத்தவோ அல்லது நெருக்கடிக்கு உட்படுத்தவோ எடுக்கப்பட்ட முயற்சியாக கூட இது இருக்க முடியும் .தாலிபானையும் அல் கைதாவையும் வைத்து பாகிஸ்தானை குட்டிச்சுவராக்கிய பாடம் ,நமக்கு முன்னே வாழும் உதாரணம் தானே ..

ரஷ்யா , சிரியாவின் யுத்த களத்தில் நுழைந்தது தொடக்கம் அமெரிக்காவினால் கைவிடப்பட்டுப்போன மிதவாத மில்லாத குழுக்கள் தாம் கைப்பற்றி இருந்த நிலப்பகுதிகளை சிரிய இராணுவத்திடமும் குர்திஷ் ஆயுத குழுக்களிடமும் இழந்தன .

சாம்பார் ஆகிப்போயுள்ள சிரியாவின் பிரச்சினையை சாதம்  ஆக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அமெரிக்கா தீவிரவாத அமைப்புக்களை ஓரம் கட்ட ஏற்படுத்தப்பட்ட நாடகமே இந்த யுத்த நிறுத்தம் .
எதிர்வரும் சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த யுத்த நிறுத்தத்தில் ஐ எஸ் , அல் நுஷ்ரா மற்றும் அஹ்ரார் அல் ஷாம் ஆகியவற்றுக்கு இடம் கிடையாது என திட்டவட்டமாக அறிவித்து விட்டது அமெரிக்கா .

இந்த யுத்த நிறுத்தத்தில் அமெரிக்கா ரஷ்யா ,அசாத் ,மிதவாதம் இல்லா போராட்ட குழுக்கள் ,குர்திஷ் குழுக்கள் என்பன கைச்சாத்திட்டு இணங்கியுள்ளன . இந்த யுத்த நிறுத்ததின் நோக்கம் சிரியாவின் யுத்ததில் பொது எதிரியை அடையாளம் கண்டு தாக்குவதுதான் . அந்த பொது எதிரி ஐ எஸ் , அல் நுஷ்ரா மற்றும் அஹ்ரார் அல் ஷாம் ஆகிய அமைப்புகள் தான் .

பிரித்து பிரித்து தாக்குதல்களை மேற்கொண்ட அமெரிக்கவும் ரஷ்யாவும் ஏனைய நாடுகளும் பொது எதிரி மீது தாக்குதல் தொடுத்து அழிப்பதுதான் இதன் பிரதான நோக்கம் .இதனால் வளங்கள் செயல் திறனாக பயன்படுத்தப்பட முடியும் என்பது அமெரிககாவின் கனவு . 'தீவிரவாத 'அமைப்புகள் அழிக்கப்பட்டால் அரசியல் தீர்வு காண்பது சாத்தியமானது என்பதே அமெரிக்காவின் எதிர்பார்பபு .

ஏற்கனவே யுத்த நிறுத்ததின் பின்னணி அறிந்துதானோ எனனவோ இதில் பங்கு பெறுவது சாத்தியம் இல்லை என துருக்கி கூறியுள்ளது . அமெரிக்காவின் கனவுகள் நனவாகுமா... ? சூடு கண்ட பூனை அடுப்பங்கரை பக்கம்தான் படுப்பேன் என்று அடம் பிடிக்கிறது .

2 comments:

  1. அவ தந்திரமாக மேற்க்கத்திய நாடுகள் தங்களின் படைபலத்தை மத்திய கிழக்கில் பரிசித்து பார்க்கிறது.அதற்க்கு விலை முஸ்லிம்கள்.

    ReplyDelete
  2. Wrong article American no need to beat ISIS.
    Author directing Muslims concerns in to different angle. When KSA gathered Muslim nation to fight against Asad all this drama began

    ReplyDelete

Powered by Blogger.