நீரையும், நீர் நிலைகளையும் பாதுகாப்பது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்கள்
தண்ணீரின் முக்கியத்துவத்தினை அறிந்துக்கொள்வது. இவ்வாறு இதை அறிவது அதனை பாதுகாப்பது மீதான ஆர்வத்தினை அதிகரிக்கும். குர்ஆனில் இதன் முக்கியத்துவத்தினை குறிப்பிடும் போது, இவ்வாறு குறிப்பிடுகிறது.“ அவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விசாலமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்”(2:22).இது மனிதனின் ஆகாரமாகிய தாவரங்களுக்கும் கனிகளுக்கும் மிக முக்கியமானது.பொதுவாக உணவுக்கு முக்கியமானது. உணவின்றி உயிரினம் ஒரு போதும் வாழ முடியாது.இன்னும் அல்லாஹ் குறிப்பிடும் போது “அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான். (14:32) நீர் நிலைகளை அல்லாஹ் வசப்படுத்தி தன்துள்ளான் அதை நல்ல முறையில் பயன் படுத்துவதற்கு.ஆகவே மனிதன் இதன் பயன்களை அறிந்து அதிலிருந்து உரிய பயனை அடைய வேண்டும்.
தண்ணீர் அதன் தூய தன்மை மாறிவிட்டால் அதை பயன் படுத்த முடியாது.அல்லது அது ஒவ்வாத்தன்மையினை ஏற்படுத்தும்.உதாரணமாக உப்பு நீரை பருக முடியாது. அவ்வாறே அசுத்தமான நீரை மனிதனின் அத்தியவசிய தேவைகளுக்கு பொறுத்தமானதாக அமையாது. ஆகவே அதை பாதுகாப்பது கட்டாயம் எனும் வழிகாட்டல்.அல்லாஹ் குறிப்படும் போது (நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்). (67:30).அல்லாஹ் கேட்கின்றான் ஓடும் தண்ணீர் அது திறவமாக இருக்கும் போது தான் அதை எவ்வாறு வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்.அது திண்மமாக மாறும் போது அது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். இவ்வாறே அது அசுத்தமானதாக இருக்கும் போது அது மாசடைந்ததாக இருக்கும்.இதன் போது பல பாரிய விளைவுகளை உண்டு பன்னும்.தண்ணீரின் அடிப்படை நோக்கம் செயலிழந்து விடும்.
ஆகவே இஸ்லாம் தண்ணீரின் தூய தன்மையினை பாதுகாக்கு முகமாக பல நேரடி மறைமுக வழிகாட்டல்களை முன் வைக்கின்றது.அதன் படி இஸ்லாமிய அடிப்படை கடமைகளுடன் சுத்தமான நீர் மிகவும் தொடரப்புடையது.
இஸ்லாமிய கடமைகளில் சுத்தம் என்பது மிக முக்கியமானது. அசுத்தமானதை கூட சுத்தமான தண்ணீரை கொண்டு சுத்தம் செய்யுமாறு இஸாலாம் பணிக்கிறது. தொழுகைக்கு முன் வழூஃ என்பது மிக முக்கிய அடிப்படை இது இன்றி தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.ஆகவே இதை நிறை வேற்ற சுத்தமான தண்ணீர் இருக்க வேண்டியது கட்டாயம்.சுத்தமான தண்ணீரை அதன் தன்மையினை பாதுகாக்குமாறு மறைமுகமாக கூறுவதுடன் இவ்வாறு செய்தால் மாத்திரமே. சுத்தமான நீரை பெற்றுக்கொள்ள முடியும்.இவ்வாறே மலசலம் கழித்தபின் சுத்தம் செய்வது.அசுத்தமான உடல், உடைகள் போன்றவற்றை சுத்தம் செய்வது ஆகியனைத்துக்கும் தண்ணீரின் சுத்தம் மிக முக்கியமானது.அல்லாஹ் வானிலிருந்தும் சுத்தமான தண்ணீரை பூமிக்கு அனுப்புகின்றான.இதை அல்லாஹ் குறிப்பிடும் போது. “இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை) க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்”. (25:48)
இஸ்லாம் நீர் மாசடையும் வழிகளை அடைத்துள்ளது.
பொதுவாக தண்ணீரை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும் என பணித்துள்ளது. தண்ணீர் சிறிய அளவாக இருப்பினும் அதன் தூய தன்மையை பாதுகாகாக்க பல வழிகாட்டல்களை முன்வைக்கின்றது.பாத்திரங்களில் அழுக்கு விழாமல் இருக்க அவற்றை மூடி வைக்குமாறு பணிக்கிறது.இதை நபிகளார் குறிப்பிடும் போது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள்.உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். மேலும், தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி, 3316). 'கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள், தண்ணீர் பாத்திரத்தை மூடி வையுங்கள், உணவுப்பாத்திரத்தை மூடி வையுங்கள், விளக்கை அணைத்து விடுங்கள். ஏனென்றால் ஷைத்தான் பூட்டிய கதவை திறக்க மாட்டான், முடிச்சை அவிழ்க்க மாட்டான், பாத்திரங்களை திறக்க மாட்டான். இருந்தாலும் எலிகள் வீட்டை கொளுத்தி விடும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புஹாரி - 5624, திர்மிதி - 1872) இது சிறிய பாத்திரங்களை குறிப்பிட்ட போதும் அனைத்து நீர் தேக்கங்களும் அடங்கும் இதன் பாதுகாப்பு வேறுபடலாம்.நோக்கம் நீர் அசுத்தமாகாது பாதுக்கப்பதும் ஆகும்.
இவ்வாறே பாத்திரங்களை மூடி வைக்க பணித்ததை போல் அது திறந்த நிலையிலும் அதை பாதுகாக்குமாறு பணிக்கின்றது.இதில் ஒருவர் அவரின் கரங்கள் அழுக்கான நிலையில் அதில் கையை விடாது பாத்திரத்துக்கு வெளியில் கையை கழுவிய பின் பாத்திரத்தினுள் இட்டு கழுவுமாறு பணிக்கிறது.இதை நபிகளார் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது உங்களில் ஒருவர் நித்திரையிலிருந்து எழுந்தால் மூன்று முறை அவரது கைகளை கழுவாதவரை பாத்திரத்தில் அவரது கைகளை போடாமல் இருக்கட்டும். (நூற்கள்-புகாரி முஸ்லிம்) இன்னும் தண்ணீர் கொள்ளும் பாத்திரத்திரமும் சுத்தமானதாக இருக்க வேண்டும்.பாத்திரம் என ஹதீஸில் வந்திருந்தாலும் தண்ணீரை கொள்ளும் அனைத்தையும் உள்ளடக்கும்.இதைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் வாய்விட்டு குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 172).பாத்திரம் எனும் சொல் அனைத்தையும் உள்ளடக்கும்.
நீர் நிலைகளை பாதுகாப்பது மீதான இஸ்லாமிய வழிகாட்டல்
ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி, எண்: 239).இன்னொரு அறிவிப்பில் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்க வேண்டாம்.என வந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் இந்த நீர் நிலை அசுத்தமடைய கூடாது என்பதாகும். தேங்கி நிறகும் நீரானது மிக விரைவில் சிறிய அழுக்கு விழுந்தாலும் அசுத்தமாகி விடும்.ஓடும் தண்ணீர் இதற்கு மாற்றமானது.எனினும் ஓடும் நீரில் மல சலம் கழிக்க முடியும் என பொருள் கொள்ள முடியாது.எது என்ன தேவைக்கு படைக்கப்பட்டதோ அதன் தேவையினை அதன் உரிய இஸ்லாமிய வழிகாட்டலின் பிரகாரம் பெற்றுக் கொள்வது தான் ஒரு பூரணமான முஸ்லிமின் பண்பாகும்.ஓடும் நீரில் சிறுநீர் கழிப்பது வெறுக்கத்தக்க ஒரு செயல்.அதில் மலம் கழிப்பது மிகவும் பாரதூரமான ஒரு கெட்ட செயல்.தேங்கி நிற்கும் நீரில் இத்தைய செயற்பாடுகள் மிகவும் அறுவறுப்பு மிக்கதாகவும் தடுக்கப்பட்டதாகவும் இருக்கின்றது. இவ்வாறு சிறுநீர் கழிப்பதானது நீரை மாசுபடுத்துவத்துடன் பல நோய்களுக்கும் காரணியாக அமையும்.இவ்வாறு பரவும் நோய்கள் பின்னைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இஸ்லாம் இதை பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிவித்து அதன் உண்மை தன்மையினை எடுத்துக் காட்டியுள்ளது. ஆகவே இஸ்லாம் இதை தடுத்துள்ளது.இவ்வாறே உடல் அழுக்கான நிலையில் தேங்கி நிற்கும் நீரில் மூழ்கி குளிப்பதும் கண்டிக்கப்படக்கூடியதும் தடுக்கப்பட்டதுமாகும்.அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் உங்களில் ஒருவர் குளிப்பு கடமையான வேளையில்-ஸ்கலிதமான நிலையில்-தேங்கி நிற்கும் நீரில் மூழ்கி குளிக்க வேண்டாம்.அப்போது எவ்வாறு குளிப்பது என கேட்க,அதை அவர் பரிமாறி குளிக்கட்டும் என பதிளலித்தார்கள்.(நூல் முஸ்லிம்,எண்:283),
பரிமாறப்படும் போது அது மாசடையாது பேணல்
ஒருவர் தண்ணீர் அல்லது வேறு திரவங்கள் ஆகியவற்றை பயன் படுத்தும் போது அதில் மூச்சுவிடுவது தடுக்கப்பட்ட ஒன்று என இஸ்லாம் குறிப்பிடுகிறது.இவ்வாறு மூச்சுவிடுவதானது அப்பாத்திரத்தில் உள்ளவை மாசடைய வழி வகுக்கும்.சுவாத்தின் போது உள்வாங்கப்படுவது சுத்தமானதாகவும் அதன் வெளியீடு நச்சுவாயுவாகவும் இருக்கின்றது.இவ்வாறு தடுத்துவந்துள்ள ஹதீஸ்.நபி (ஸல்) அவர்கள் கூறும் போது. உங்களில் ஒருவர் சிறுநீர் கழித்தால் அவர் தன்னுடைய வலக்கரத்தால் அதைத் தொடவேண்டாம். இன்னும் வலக்கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.இதை அபூ கதாதா (ரழி) அவர்கள் தன்னுடைய தந்தை வாயிலாக அறிவித்தார். (நூல்: புகாரி, 154).
நீரை பிறருக்கு பயனுள்ளதாக மாற்றுவதும் நன்மைக்குறிய ஒன்று. சமூக, கோத்திர, இன,நிற பேதம் துறந்து அனைவருக்கும் பயனளிக்கும் தண்ணீராக மாற்றுவது காலத்தின் தேவை.இதன் விளைவு தண்ணீரின்றி கண்ணீர் வடிக்கும் கண்களுக்கு விடிவை ஏற்படுத்தும்.என்பது திண்ணம்.
Post a Comment