சுலோகங்களை ஏந்திநின்ற யாழ்ப்பாண முஸ்லீம்களை, சந்தித்த ஷெயிட் அல் ஹுஸைன்
-பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹீஸைன் இன்று (07) யாழ் முஸ்லீம்களை சந்தித்தார்.
நல்லூர் கோயிலுக்கு இன்று செல்லும் முன்னர் முன்றலில் நின்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தி நின்ற யாழ் முஸ்லீம் பிரதிநிதிகள் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.
இதன் போது தாங்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாகவும், யுத்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது விபரங்களை ஆணையாளரிடம் கையளித்ததாக யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் செயலாளர் ஆர்.எம் சுவர்ஹஹான் தெரிவித்தார்.
அத்துடன் முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் சம்மேளனத்தின் தலைவர் ஜமால் முஹமட் ,முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
well done !! jaffna muslims great work !!
ReplyDeleteஇஸ்லாமிய நண்பர்களே,
ReplyDeleteநமது சக இஸ்லாமியரான திரு. அல்ஹுஸைன் அவர்கள் படித்தவராகவும் ஐ.நாவின் ம.உ.பேரவையின் ஆணையாளராகவம் இருக்கின்றார் என்பதிலே இல்லாத பெருமை அவர் ஓர் உயர்ந்த பண்பாளராகவும் இருக்கின்றார் என்பதிலே எனக்கு நிறையவுள்ளது.