துருக்கி ஜனாதிபதியை தூற்றிய, மனைவி மீது கணவன் வழக்கு
துருக்கி டிரக் வண்டி ஓட்டுனர் ஒருவர் ஜனாதிபதி ரிசம் தயிப் எர்துகானை அவமதித்ததாக தனது சொந்த மனைவி மீது வழக்கு தொடுத்துள்ளார்.
ஜனாதிபதி தொலைக்காட்சியில் தோன்றும் நேரங்களில் எல்லாம் தனது மனைவி அவரை தூற்றுவதாகவும் அதுபற்றி தான் எச்சரித்ததாகவும் 40 வயதான அலி டி என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். தனது மனைவி ஜனாதிபதியை அவமதித்து கூறும் வார்த்தைகளை பதிவு செய்திருக்கும் அந்த நபர் அதனை ஆதாரமாக கொண்டு வழக்குத் தொடுத்துள்ளார்.
எனினும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது குறித்து உறுதியாகவில்லை என்று துருக்கியின் யெனி சபக் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
“ஏன் இப்படி செய்கிறாய் என்று தொடர்ந்து மனைவியை நான் எச்சரித்து வந்தேன்? எமது ஜனாதிபதி நல்ல மனிதர். துருக்கிக்கு நல்லது செய்தவர்” என்று அந்த கணவர் யெனி சபக் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம் 38 வயதான மனைவி தனது கணவனிடம் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார்.
Post a Comment