தொடர்ந்தும் செயற்கை கோள்கள், விண்ணில் ஏவப்படும் - வடகொரியா உறுதி
உலக நாடுகள் எதிர்ப்பை மீறி உளவு ராக்கெட்டை வடகொரியா விண்ணில் செலுத்திய நிலையில், இது போல் தொடர்ந்து பல செயற்கை கோள்களை விண்ணில் ஏவப்படும் என வடகொரியா தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் (ஜனவரி) 6–ந்தேதி வடகொரியா நைட்ரஜன் குண்டு வெடித்து சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், உள்ளிட்ட உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்தது. அதை கண்டு கொள்ளாத வடகொரியா சமீபத்தில் நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணையை செலுத்தி சமீபத்தில் சோதனை நடத்தியது. அதற்கும் அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொருளாதார தடை விதிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பூமியை உளவு பார்க்கும் செயற்கை கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும் எச்சரித்தன.
வடகொரியா நேரப்படி இன்று காலை 9 மணிக்கு ராக்கெட் மூலம் அந்த செயற்கை கோள் ஏவப்பட்டது. இந்த தகவலை வடகொரியாவே அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. வட கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஜப்பான், மற்றும் தென் கொரியா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இருக்கும் வட கொரியா தூதரகம் வெளியிட்டுள்ள அறிகையில் “ வட கொரியா அறிவியலுக்கும் நவீன தொழில் நுட்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. எனவே வருங்காலத்திலும் மனிதர்களால் உருவாக்கப்படும் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment