Header Ads



சிங்கத்தின் இரத்தத்தை, ஏற்றுக்கொள்ள முடியாது - கர்தினால் மல்கம் ரஞ்சித்

சிங்க லே  அமைப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீ தலைமையிலான அமைச்சின் அதிகாரிகள் கர்தினலை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

மக்களை ஒன்றிணைக்க முழுக் கவனம் செலுத்தப்பட வேண்டிய தருணத்தில் மக்களை பிளவடையச் செய்யும் சிங்களே போன்ற அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

மக்களை பிளவடையச் செய்யும் இந்த நடவடிக்கையை நல்ல நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்க வேண்டியது அவசியமானது.

இலங்கை அடையாளத்தை உறுதி செய்ய வேண்டுமே தவிர, இன சமூகங்களின் அடையாளத்தை உறுதி செய்ய முயற்சிக்கக் கூடாது.

சிங்க லே அமைப்பு 1950ம் ஆண்டுகளில் ஸ்ரீ குழப்பத்தையே நினைவுபடுத்தகின்றது.

வாகனங்களில் ஸ்ரீ என்ற இலக்கம் பயன்படுத்தப்படுவதற்கு வடக்கு தமிழ் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

மூன்று மொழிகளையும் பாடசாலைகளில் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

ஒரு மொழியில் பாடங்களை கற்பிப்பதுடன் ஏனைய இரண்டு மொழிகளையும் கற்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கையானது தேசிய கொள்கைகயாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து இன மற்றும் சமய மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கர்தினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.