Header Ads



பொதுபல சேனாவுக்கு, ஜம்­இ­யத்துல் உலமா சபை பதில்...!

-ARA.Fareel-

ஐ.எஸ். போன்ற இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்கு முர­ணாக செயற்­படும் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளோடு எவ­ரா­வது தொடர்­பு­பட்டால் நாம் அதனை மிகவும் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம்.

இவ்­வா­றான அமைப்­பு­க­ளுக்கும் இஸ்­லா­மிய அடிப்­படை விழு­மி­யங்­க­ளுக்கும் எவ்­வித தொடர்பும் கிடை­யாது என்­பதை உறு­தி­யாகக் குறிப்­பி­டு­கின்றோம் என அகில இலங்கை ஜம்­இ­யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.

எவ­ரா­வது தனி நபர் தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வராக இருந்தால் அவர்­க­ளு­க்கு எதி­ராக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு அர­சாங்­கத்­திடம் வேண்­டு­கோளும் விடுத்­துள்­ளது.

உலமா சபையை தீவி­ர­வா­தத்­துடன் தொடர்பு­ப­டுத்­து­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது.

இஸ்லாம் மனித இனத்­திற்கு கருணை காட்டும் மார்க்­க­மாகும். அதன் அடிப்­படை போத­னை­க­ளாக சமா­தானம், அமைதி, பாது­காப்பு 
மற்றும் சகோ­த­ரத்­துவம் போன்­றன காணப்­ப­டு­கின்­றன. ஒரு தனி மனி­த­னு­டைய கொலையை முழு மனித சமூ­கத்­தி­ன­ரி­னதும் கொலை­யாக கரு­து­கின்­றது என்றும் தெரி­வித்­துள்­ளது.

அகில இலங்கை ஜம்­இயத்துல் உலமா சபையை தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­ப­ப­டுத்­தி­யுள்­ள­மைக்கு பதி­ல­ளிக்­கும்­வ­கையில் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்  வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். 

அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;
‘இஸ்லாம் போதிக்­கின்ற சமா­தானம் அமைதி மற்றும் சகோ­த­ரத்­துவம் என்­பன சாதி, மத பேத­மின்றி அனைத்து மனி­தர்­க­ளுக்கும் பொது­வா­ன­வை­யாகும்.

தீவி­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­தலை இஸ்லாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. குழப்பம் விளை­வித்தல், கடும் போக்­காக நடந்து கொள்­ளுதல், கொலை செய்தல் ஆகி­ய­வற்றை பெரும்­பா­வங்­க­ளா­கவும் குற்­றங்­க­ளா­கவும் இஸ்லாம் கரு­து­கி­றது.

2014.7.6 ஆம் திகதி இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தில் ஐ.எஸ். அமைப்பைக் கண்­டித்து அறிக்­கை­யொன்­றி­னையும் உலமா சபை வெளி­யிட்­டுள்­ளது.

முஸ்­லிம்­க­ளா­கிய நாம் எமது தாய் நாட்டில் பல நூற்­றாண்­டு­க­ளாக நாட்டுப் பற்­று­டனும் ஏனைய சமூ­கங்­க­ளுடன் ஒற்­று­மை­யா­கவும் சக­வாழ்­வு­டனும் வாழ்ந்து வரு­கின்றோம்.

தாய்­நாட்­டுக்கு பாதிப்பு ஏற்­படும் செயற்­பா­டு­க­ளிலும் இலங்­கையின் சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான ஒற்­று­மையை சீர்­கு­லைக்கும் செயற்­பா­டு­க­ளிலும் இந்­நாட்டு முஸ்லிம் சமூகம் ஒரு­போதும் ஈடு­படப் போவ­தில்லை என்­பதை உறு­தி­யாகக் கூறிக் கொள்­கிறோம்.

பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பா­ளரின் கூற்று இந்­நாட்டு  முஸ்­லிம்­களை கவ­லை­ய­டையச் செய்­துள்­ளது. பொய்­யான கூற்­றுக்கள் வெளி­யி­டப்­ப­டு­வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

2014 ஆம் ஆண்­டி­லேயே உலமா சபை ஐ.எஸ். தொடர்பில் தனது நிலைப்­பாட்டை பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­ற­ன­வாகும் றனவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. dear jaffna muslim, Don't put the photo like that. BBS is not a acceptable organisation which spreads terrorism in the country. Don't equivelize it with ACJU which is an accepted body

    ReplyDelete
  2. ஜம்மியத்துல் உலமாவின் சின்னத்துக்கு (Logo) இணையாக பொதுபலசேனாவின் சின்னத்தை போட்டு ஜம்மியத்துல் உலமாவை கொச்சைப்படுத்தாதீர்கள்.

    ReplyDelete
  3. சொல்ல வேண்டிய விடயம், ஆனால் BBS இற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. அதே நேரம் நவ்பர் ஆதரி காஸிபி போன்றவர்கள் ஐசிஸ் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றார்களே?

    ReplyDelete
  4. மாற்று மதத்தவனுக்கு உணவளிக்கும் போது அதன்மீது 3 முறை துப்பியே பரிமாற வேண்டும் என்று குர்ஆனில் உள்ளதாக கூறியவர்களை வெலிக்கட பக்கம் அனுப்பி விட்டால் இதுபோன்ற அறிவாளிகள் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.

    ReplyDelete
  5. நல்ல இதற்கு அறிக்கை விட்டு தமது நிலைப்பாட்டை உறுதி செய்வதும் அதற்கான கண்டன நடவடிக்கைகள் வரவேற்க தக்கது ஆனால் ஞானசார அல்குர்ஆனை இலங்கையில் தடை செய்ய வேண்டும் எங்களின் உயிரிலும் மேலான நபி (ஸல்) அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்று சூளுரைத்து கண்டிக்காமல் மௌனம் காப்பது மன வேதனை விடயமாகும்

    ReplyDelete

Powered by Blogger.