Header Ads



மைத்திரியின் பேஸ்புக்கிலிருந்து, உண்மையான சிங்களவர்களை விலகுமாறு கோரிக்கை

 -ஹசன்-

இன்றைய தினம் கொண்டாடப்பட்ட இலங்கை 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகளின் போது, அரசு ஏற்கனவே தீர்மானித்தான் பிரகாரம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையானது யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்கள் மத்தியிலும் புதிய நம்பிக்கைக் கீற்றினை தோற்றுவித்திருக்கின்றது.

இந்நிலையில் இதற்கு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வந்த கடும்போக்கு பெளத்த அமைப்புக்கள் மற்றும் சில அரசியல் வாதிகள் நேரடியாகவும், இணையத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக பல நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன் ஒரு கட்டமாக சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் இல் ஜனாதிபதியை வீழ்த்துவதற்கான முயற்சிகளை பகிரங்கமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய இம்முறை 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகளின் போது தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலிருந்து உண்மையான சிங்களவர்களை விலகிக்கொள்ளுமாறும் பேஸ்புக் பக்கத்தை “Unlike” செய்யுமாறும் பிரச்சாரங்கள் முன்னேடுகப்பட்டுள்ளது.

குறித்த பிரசாரங்கள் பகிரங்கமாக மேற்கொள்ள ஆரம்பிக்கப்படும் சமயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை 826,250 பேர் “like” செய்திருந்தனர். இந்த செய்தியை பிரசுரிக்கும் நேரத்தில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பக்கம் 826,002 “like” ஆகக் குறைவடைந்துள்ளது.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை 843,138 பேர் “like” செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவுக்கும் அவரது இனவாத கூட்டாளிகளுக்கும் பேஸ்புக்கிலுள்ள இளைஞர்கள் மிகுந்த சவாலாக உள்ளனர். கடந்த ஜனவரி 8 தேர்தலிலும் மஹிந்த தோற்கடிப்பட்டமைக்கு இந்த பேஸ்புக் இளையோரின் பங்கு மிகவும் காத்திரமாக காணப்பட்டிருந்தது இதன் காரணமாகவே இளையோரை நோக்கி மகிந்தவும் அவரது இனவாத கூட்டாளிகளும் தங்களுடைய கவனத்தை செலுத்திவருகின்றனர். இதன் ஒரு கட்டம்தான் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புகிலிருந்து விலகுமாறான (Unlike ) கோரிக்கை என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த ஒன்று.

சிறுபான்மையினருகாக ஜனாதிபதி தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் காரணத்தினாலேயே இந்த இணையத் தாக்குதல்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆட்சியை ஏற்படுத்தியது போன்று அதனை பாதுகாப்பத்திலும் சிறுபான்மையினரின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் உள்ள இளையோர் மஹிந்த மற்றும் அவரது இனவாத கூட்டாளிகளின் இனவாத திட்டங்களை சரியாக விளங்கிக்கொண்டு அவற்றை முறியடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் இலங்கையில் இனங்களுக்கிடையில் சமாதானம் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதனூடாக சிறந்த ஒரு நாட்டினை எதிர்கால சந்ததிக்கு வழங்க எடுக்கும் முயற்சிகளுக்கு மேலும் வலுவூட்ட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எனவே அவர்கள்ளது இத்திட்டத்தை முறியடிப்பதற்காக சிறுபான்மையினரின் பங்களிப்பு அவசியம் சிறுபான்மையினரான  நாம்  நமக்காக குரல் கொடுக்கும் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை like மற்றும் share செய்து இனவாதிகளுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்.

3 comments:

  1. அந்த லிங்க்கை இங்கே சொடுக்கிவிட்டிருக்கலாமே

    ReplyDelete
  2. 827348 ஆக அதிகரித்துள்ளது ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ பேஸ்புக் பேஜ்

    ReplyDelete
  3. Noted.
    Pls give us the link

    ReplyDelete

Powered by Blogger.