Header Ads



ஆப்கானிஸ்தான் அதிபரிடம், பல்பு வாங்கிய மோடி

உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி-க்கு தவறான நாளில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோடியின் ட்விட்டர் பக்கத்தில் "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஷ்ராஃப் கானி. உங்களுக்கு நீடிய வாழக்கை மற்றும் உங்கள் வாழ்க்கை நல்ல உடல்நலம் மற்றும் மகிழ்ச்சியாக அமைய பிராத்திக்கிறேன் என வாழ்த்து கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த ஆப்கானிஸ்தான் அதிபர்,  'எனக்கு இன்று பிறந்த நாள் இல்லை, என்னுடைய பிறந்த நாள் மே 19-ம் தேதிதான். எனினும் உங்களுடைய அன்பான வார்த்தைக்கு நன்றி!' என அவர் தெரிவித்துள்ளார்.

பிறந்த நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்பே ஆப்கானிஸ்தான் அதிபருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி,  பிரதமர் மோடி பல்பு வாங்கி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது


No comments

Powered by Blogger.