Header Ads



நியூசிலாந்து பிரதமருக்கு யானைக் குட்டி, வழங்கிய ஜனாதிபதி மைத்திரிக்கு எதிர்ப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீக்கு, யானைக் குட்டியொன்று அன்பளிப்பதாக வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மிருக நலன் ஆர்வலர்களினால் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நல்லெண்ண அடிப்படையில் நட்பு ரீதியில் இந்த யானைக் குட்டியை வழங்கியிருந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் அஞ்சலி என்ற யானைக் குட்டியொன்று நியூசிலாந்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பில் நடந்த ஒரு விழாவில் ஜான் கீயிடம் இந்த யானைக்கான உரிமப் பத்திரத்தை வழங்கினார்.

இந்த நடவடிக்கையை விமர்சித்த வன விலங்கு ஆர்வலர்கள் ஐந்தே வயதான இந்த குட்டி யானையை அதன் குடும்பத்திடமிருந்து பிரிப்பது என்பது கொடுமையானது என்று கூறினர்.

நந்தி என்ற இந்த யானையை நியூசிலாந்தில் இருந்து வந்த விலங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததாக செய்திகள் கூறுகின்றன.

இலங்கையில் பொதுவாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குப் பழகிய யானைகள் நியுசிலாந்து போன்ற சராசரி 15 டிகிரி வெப்பநிலை நிலவும் நாடுகளில் வாழத் தொடங்குவது அதிர்ச்சியாக இருக்கும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இலங்கை யானைகளைப் பரிசாக அளிக்கும் ஒரு நீண்ட கால வரலாறு கொண்டது. சீனா, ஜப்பான், தென் கொரியா, செக் குடியரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இலங்கை இது போல யானைகளைப் பரிசாகத் தந்திருக்கிறது.

1 comment:

  1. சூழல் சுவாத்தியம் பற்றி பேசும் இந்த ஆசாமிகள்தான் வெளிநாட்டு நாயொன்றை இலங்கையின் 27℃ வெப்பநிலையில் அடைத்து வைத்து கொடுமை செய்வதும்.

    ReplyDelete

Powered by Blogger.