Header Ads



பாட்டு போடும் பஸ்ஸில், பயணித்துப் பார்...!


-MOHAMED NIZOUS-

உன்னைச் சுற்றி
ஒலிக் கஷ்டம் தோன்றும்…
உள்ளம் அவதிப்படும்…
பயணத்தின் நீளம்
விளங்கும்….
உனக்கும்
வாந்தி வரும்…
தலை எழுத்தை
நொந்து கொள்வாய்
பாடகன்
பசாசு ஆவான்.
ஒரே மெட்டு கேட்டே
காது கிழியும்
காதிரண்டும்
வலி கொள்ளும்
***
கண்டக்டரை முறைப்பாய்
பல முறை
படுக்கப் பார்ப்பாய்.
பாட்டுப் போகையில்
நிமிஷங்கள் வருஷமென்பாய்…
CD இறுகினால்
நிமிஷங்கள்
நிம்மதியாகும்.
காக்கைகூட பாட்டை
கவனிக்காது
ஆனால்…
இந்த உலகமே
கவனிப்பதாய்
கத்துவான்.
வயிற்றுக்கும் காதுக்கும்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்…
இந்த ட்ரபிக் இந்த சிக்னல்
இந்த ஹோல்ட் இந்த ஸ்பீக்கர்
எல்லாம்
உன்னை கடுப்பேற்றும்
ஏற்பாடுகள்
என்பாய்
பயணித்துப் பார்
***
இருக்கிற செற் அடிக்கடி
எகிறிக் குதிக்கும்.
எஞ்சின் அலைவரிசைகளில்
அவன் குரல் மட்டும்
அறுக்கும்
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்…
பொறுமையின்
திரைச்சீலையைக்
சத்தம் கிழிக்கும்
அலுப்பு ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
காது மட்டும்
சகாராவாகும்…
கோபங்கள் சமுத்திரமாகும்…
பிறகு
தலை எழுத்தை எண்ணி
சமுத்திரம் அடங்கும்…
பயணித்துப் பார்
***
சின்ன சின்ன
ஸ்ட்ரக்களில்
சிலிர்க்க முடியுமே…
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
பொறுமை காக்க முடியுமே…
அதற்காகவேனும்…
வீண் என்ற சொல்லுக்கும்
விழல் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்…
பயணித்துக் கொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
பயணிக்கவும் முடியுமே…
அதற்காக வேணும்…
பயணித்துப் பார்

4 comments:

  1. Yes I was suffering a lot, a common senseless drivers and transport system in Sri Lanka !!

    ReplyDelete
  2. Paattuppodum Bus mattumaa ippadi ? Ovvoru vellikkilamayum
    Jummavil poay utkaarnthirukkum nam bakthargalayum kettaal
    theriyum Alim enna sonnaar enru ?

    ReplyDelete
  3. wonder full kavithai aaha oho

    ReplyDelete
  4. viramutthu must read this

    ReplyDelete

Powered by Blogger.