Header Ads



மகிந்த தொடங்கியதை, முடித்துவைக்குமாறு ரணில் உத்தரவு

கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் கோடிக்கணக்கான ரூபா முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

மத்தல விமானநிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஹம்பாந்தோட்டை மாநாட்டு மத்திய நிலையம், ஹம்பாந்தோட்டை பரிபாலன கட்டடத் தொகுதி, சூரியவௌ கிரிக்கெட் மைதானம், ஹம்பாந்தோட்டை உலர்வலயப் பூங்கா போன்ற பாரிய திட்டங்களைப் பார்வையிட்ட பின்னர் பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியிருக்கிறார். 

இந்தத் திட்டங்கள் மீதான கடன்கள் ஏதாவது பெறப்பட்டிருந்தால் அவற்றைச் செலுத்திவிட்டு அபிவிருத்திப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். 

பிரதமரின் இந்த நேரடி விஜயத்தின் போது அமைச்சர்களான சஜித் பிரேமதாச, நிமல் சிறிபால டி சில்வா, மலிக் சமரவிக்கிரம, சாகல ரத்னாயக்க, மகிந்த அமரவீர, காமினி ஜயவிக்கிரம பெரேரா, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி ஆகியோருடன் அரச உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. Neenga izukku munnaala engavazu circus companyila velai
    paartheengala Sir !

    ReplyDelete

Powered by Blogger.