பத்திரிகையை விரித்து படுத்து உறங்கிய வீரவன்ஸ, மோசடி பணத்தில் மாளிகை கட்டினார் - ரஞ்சன்
மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இடையில் ஒப்பந்தங்கள் இருப்பதால், ராஜபக்சவினர் கைது செய்யப்பட போவதில்லை எனக் கூறப்பட்டதுடன் யோஷித்த ராஜபக்சவின் கைதுடன் அது பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று -26- நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சுரக்காய் மீது வைத்த கை பூசணிக்காய் மீது வைக்கப்படும் என்ற கிராமத்து கதை ஒன்று உள்ளது. தற்போது பூசணிக்காய் மீது கை வைக்கப்பட்டுள்ளதால், சுரக்காய் மீதும் வைக்கப்படும்.
தமது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட ஊழல், மேசாடிகள் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு ஆணைக்குழுக்களுக்கும், சிறைச்சாலைகளும் செல்ல வேண்டியுள்ளது.
நான் வெளியிட்ட ஊழல் தொடர்பான தகவல்கள் காரணமாக இழப்பீடு கோரி சட்டத்தரணிகள் ஊடாக எனக்கு 28 கடிதங்கள் வந்தன. எனினும் எனக்கு எதிராக ஒரு வழக்கு மாத்திரமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ஸ செய்துள்ள முறைகேடுகள் காரணமாகவே அவர் ஒழுங்கு குழுவுக்கு அழைக்கப்பட்டார். பத்திரிகையை விரித்து படுத்து உறங்கிய விமல் வீரவன்ஸ, மோசடி செய்த பணத்தின் மூலமே ஹோகந்தர பிரதேசத்தில் மாளிகையைக் கட்டினார். வீரவன்ஸ என்பவர், மில்லியன் கணக்கான அரச பணத்தை மோசடி செய்த நபர் எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Telling story will not help, prove and arrest him.........
ReplyDelete