சோபித தேரருக்கு சிகிச்சை, அளித்த போலி மருத்துவர்கள்..? பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு
கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் முன்னாள் பீடாதிபதி காலம் சென்ற மாதுலுவாவே சோபித தேரருக்கு சிகிச்சை அளித்தவர்கள் போலி மருத்துவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாலம்பே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் சோபித தேரருக்கு சிகிச்சை அளிக்கபட்டிருந்தது.
இந்த வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் 13 மருத்துவர்கள் மருத்துவ சபையில் பதிவினை மீளப் புதுப்பித்துக்கொள்வர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மருத்துவர்களில் சோபித தேரருக்கு சிகிச்சை அளித்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த விடயம் குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் இந்த முறைப்பாடு தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சிங்கள இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக அறிவிக்கப்படவில்லை எனவும் போதிய வசதியின்மையே இதற்கான காரணம் எனவும் அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் இந்த வைத்தியசாலை போதனா வைத்தியசாலை என பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவர் சங்கத்தில் பதிவு செய்யாத மருத்துவர்கள் இலங்கையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சோபித தேரருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என இதற்கு முன்னரும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
Post a Comment