"மனைவி, பிள்ளைகளை காப்பாற்றவே மகிந்த ராஜினாமா செய்தார்"
தனது மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தாரை வார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மஹிந்தவின் நெருங்கிய உறவினருமான ஹேமால் குணசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் -15- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தம்மிடமிருந்து தலைமை பதிவி பறிக்கப்பட்டதாக தெரிவிக்கும் மஹிந்த ராஜபக்ஸவின் கூற்றை தாம் முற்றாக நிராகரிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், மஹிந்தவின் கருத்து முற்றிலும் பொய்யானது எனவும் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் முன்னாள் சபாசாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இனக்கப்பாட்டின் பின்னரே மஹிந்த ராஜபக்ஸ தனது முடிவை எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், தனது மனைவி ஷிராந்தி மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்த விடுவிப்பதற்காகவே கட்சி தலைவர் பதவியை தன் கண் எதிரேயே இராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் பிளவுபடாது என ஹேமால் குணசேகர மேலும் தெரிவித்தார்.
செய்வதெல்லாம் செய்து விட்டு பெரும்தலைவர் மீடியாமுன்னால் ஒவ்வொருநாளும் ஒவ்வொருவிதமாக உளருகின்றார்..மறதிநோயால் மஹிந்த அவதிப்படுவதாக அன்மையில் செய்தியினுடாக அறியமுடிந்தது அது முற்றிலும் உன்மையே...
ReplyDelete