"சீதனம் ஓர், வேதனை"
ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி)
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் றஹீம். அல்லாஹுக்கே எல்லாப் புகழும் உண்டாவதாக
அல்ஹம்துலில்லாஹ். சத்திய மார்க்கத்தை அதன் துய வடிவில் எடுத்துச் சொன்ன எம் நபி முஹம்மத் (ஸல்)அவர்களுக்கே இறைவன அருளும் சாந்தியம் உண்டாவதாக! என் அன்புக்குரிய உறவுகளே,இளசுகளே சிந்தியுங்கள்!இறைவன் திருண பந்தத்தைப் பற்றி கூறும் போது 'நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவி;களை நீங்கள் அவர்களிடம் மன நின்மதி பெறுவதற்காக உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும், கிருபையையும் ஆக்கி இருப்பதும் அவனது அத்தாட்சியிலிருந்தும் உள்ளதாகும் சிந்தித்து உணரக கூடிய சமுதாயத்தினருக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உணடு (சூரா றூம்:21)என இறைவன் கூறுகன்pறான்
எனவே இந்த வசனம் ஓர் தூய்மையான சமுகத்தை உருவாக்க ஆண் பெண் இரு பாலாருக்கும திருமணம் அவசியம் என்பதை வேண்டி நிற்கின்றது என்றாலும் நான் இந்த இடத்தில் எனது பேனா முனையினால் ஓர் திருமணத்தின் முக்கியத்துவத்தையோ, அதில் நிகழும் இன்பங்களையோ பற்றி எழுத எத்தனிக்க வில்லை. மாறாக ஓர் திருமணம் பேசப்படும் போது அதில் மந்திர வாசகமாக பேசப்படும் கேவலமான,ஓர் சமூகத்தை நடுத்தெருவுக்கு கொண்டுவரக் கூடிய ஓர் பெண்ணின் மனக் கவலைகளையும் அவளின் குடும்ப சோதனைகளையும், அவளின் அனியாய பதுவாக்களையம் ஏற்படுத்துகின்ற சீதனத்தைப் பற்றியும அதனால் ஏற்படும் இன்மை மறுமை சோதனை பற்றியும் இதனால் ஏற்படும் மிக மோசமான குடும்ப அழியுகள் பற்றியும் உங்கள் முன் இறைவனுக்கும் அவன் துதருக்கும் கட்டுப்பட்டவனாக முன்வைக்கலாம் என விரும்புகின்றேன்.
எனவே இதில் சொல்லப்படும் உபதேசங்களை உங்களுடைய வாழ்வில் உங்களை சுவர்க்கத்தின் பால் இட்டுச் செல்லும் உரம் என என்னி இறுதி வரை வாசித்து கடைப்பிடிடுங்கள். நிச்சயமாக வல்ல இறைவன் உங்கள் வாழ்வில் அபிவிருத்தியை ஏற்படுத்துவான்.
அன்பின் சகோதரர்களே! இறைவன் தனது திருமறையில் கூறுகின்ற போது 'ஆண்களே பெண்களை நிரவகிக்கக் கூடியவர்கள்!ளூசூரா நிஸா:34) எனவே இந்த வசனம் ஓர் ஆணே தன் மனைவிக்கு உணவு, உடை. மருத்துவம், வாழ்விடம் போன்றவைகளை வழங்க வேண்டும் என சுட்டிக் காட்டுகிறது. இன்னும் ஓர் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான் 'பெண்களுக்கு அவர்களின் மஹர் தொகையை மனம் உகர்ந்து கொடுத்து விடுங்கள்'(சூரா நிஸா: 04)ஆனால் எங்களுடைய கிராமங்களில் வாழக் கூடிய பெரும்பாலான ஆண்கள் இவ் இறை வசனத்தை மறந்தவர்களாகவும், புறக்கணித்தவர்களாகவும்;, அல்லாஹ்வின் கொடிய நரகத்தை பயராதவர்களாகவும். நாளை மறுமை நாளில் நான் விசாரிக்கப்படுவேன் என்பதை உணராதவர்களாகவும்.இவ் உலகில் எனக்கு குறகிய வாழ்வும் மரணமும் உண்டு என்பதை அறியாதவர்களாகவும் ஓர் மனிதனை சுவனம் செல்ல தடை செய்யக் கூடிய இந்த கொடிய சீதனத்தை படித்தவர்களும,; பாமர மக்களும, பல பட்டங்கள் பெற்றவர்களும்,பெயரளவு உலமாக்களும், பொதுமக்களும், புத்திஜீவிகளும், அரசியல் வாதிகளும், பள்ளி நிர்வாகிகளும் வெக்கம்மில்லாமலும், அல்லாஹுவினதும் அவனது துதரினதும், அச்சம் இல்லாமலும். மறுமையை அஞ்சாதவர்களாளவும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு பெருமையுடன் பொருளாகவும், வீடுகளாகவும், பணமாகவும், நகைகளாகவும், காணிகளாகவும்;, பகல் கொள்ளையடிக்கிறார்கள். இவர்கள் அல்லாஹுவை பயந்து கொள்ளட்டும். கொடுப்பவர்களும் அல்லாஹ்வை அஞ்சட்டும். நிச்சயமாக இவர்கள் பாவமண்ணிப்புக் கேட்டால் இந்தப் பாவத்தை அல்லாஹ் மண்ணிக்க மாட்டான். எது வரைக்கும் என்றால் அவர்கள் வாங்கிய பகல் கொள்ளையை(சீதனத்தை)திருப்பிக் கொடுக்கும் வரைக்கும் அல்லது அவர்கள் யாரிடம் அதனை வாங்கினார்களோ அவர்களிடம் அவர்கள் மண்ணிப்பு கேட்டாலே தவிர மேலும் அவர்கள் எவ்வளவுதான் ஹஜ் செய்தாலும், சதக்காக்கள் செய்தாலும் அதனை அவர்கள் அடைந்து கொள்ள மாட்டார்கள். இதனை எடுப்பவர்களுக்கு இன்னும் பல தடைகள் இஸ்லாத்தில் உண்டு. ஆனால் படிப்பினை பெறுகின்ற இறை உள்ளங்களுக்கு இவைகள் போதும் என நினைக்கின்றேன்.சிந்தியுங்கள்! சுவர்க்கத்தை நிரந்தர இல்லமாக்குங்கள்.
ஓர் இறைவிசுவாசம் கொண்ட சகோதரனிடம் ஒரு நிமிடம்
சகோதரனே!உனது வாழ்வில் நீ அடிமைத்தனத்துடன் வாழப் பிறந்தவ அல்ல. மாறாக நீ உலகில் சத்தியத்தை நிலை நாட்டப் பிறந்தவன் என்பதை உன் ஞாபகத்தில் வைத்துக் கொள். பிறர் சொத்தில் நீ வாழ்வது கௌரவம் அல்ல. உன் சொத்தில் பலர் ;வாழ்வதே உன் மூட்டெழும்புள்ள ஆண்மைக்கு கௌரவம் என்பதை மறந்து விடாதே! நாளை மறுமையில் உனது வாழ்வு பற்றி விசாரிக்கப்படுவாய் மறந்து விடாதே! இப்படியான கௌ;விகளுக்கு முகம் கொடுக்க இருக்கும் நீ மாட்டுச் சந்தையில் விலை பேசப்படும் மாடுகளைப் போல் உன் திருமண பந்தத்தில் இறைவன் உனக்குத் தந்த ஆரோக்கிய உடலை விலை பேச விரும்பலாமா? தனது தாய், தந்தை, சகோதர,சகோதரிகள் ஒட்டு மொத்த தனது நேச உறவையெல்லாம் துக்கியெறிந்து முன் பின் அனுபவம் அல்லாத உன்னோடு வாழ்ந்து உனக்கொரு வாரிசை விதைப்பதற்காக வருகின்றாளே இப்படியான வாழ்க்கைத் துணைவிக்கு நீ எவ்வளவு வேண்டும் என்பதை கேட்டு அள்ளிக் கொடுப்பதை விட்டு விட்டு அரக்க சிந்தனை இல்லாமல் அவளிடம் நீ நகையாக எவ்வளவு தருவாய்? பணமாக எவ்வளவு தருவாய் என்று கேட்;பது வெக்கமில்லையா? சுந்தித்துக் கொள்! தாய்க்காக எடுக்கின்றேன் என்கின்றாய். பாவத்தில் தாயை பின்பற்றுவது கூடாது என்பதை அறியமாட்டாயா? தாய்க்காக எடுத்தால் உன தாய் மறுமையில் உன்னை விட்டும் கை கழுவி விடுவாள் என்பதை மறந்து விடாதே. மறுமையில் உன் கெதி என்ன? உன் இலக்கு நாளை மறுமையில நிலையான சுவனமா? இல்லை. இவ்யுலகில உன் தாயா? சிந்தித்துக் கொள்.;
இன்னும் இப்படியான சீதனம் நாள் தோறும் அதிகரிப்பதனால் இன்னும் அதிகரிக்கவிருக்கும் பாவங்கள் ஏராளம். சிந்தித்துக் கொள்ளுங்கள் எனவே இக் கொடுமை அரங்கேர காரணமாக முதல்வர்களாக இருப்பவர்கள் யார்? மனமகனும், மகளின் பெற்றோர்களும் அல்லவா? அவர்கள் அல்லாஹுவை பயந்து கொள்ளட்டும்.
எனவே இவ்வாறான நல்ல விவகாரங்களில் எல்லோரும் ஒன்றுபட்டு பாவத்தில் ஒருபோதும் துணைபுரிய மாட்டோம் என இறைவனுக்கு அஞ்சுவீர்களேயானால் நிச்சயமாக இந்த சீதனம் எனும் இருள் அகன்று ஒளி பிறக்கும் அதன் மூலம் ஒரு சமூகம் முன்னேற்றமடையும். அதன் மூலம் ஒரு சத்திய சமூகம் உருவாகும் என்பதை மறந்து விடாதீர்கள் என் அன்பின் சகோதர உள்ளங்களே! இவைகள் வாசிப்பதற்காக அல்ல. மாறாக தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தி உலக சோதனைகளில் சத்தியத்தை சாதகமாக வென்று மறுமையில் வீரநடை போடுவதற்காக என்பதை மறவாதீர்கள். அல்லாஹ் கூறுகிறான் நல்ல விடையங்களில் ஒருவருக்கொருவர உதவியாக இருங்கள். பாவமான காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்காதீர்கள். (சூரா மாயிதா-02) அல்லாஹுத்த தஆலா நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவன்.(சூரா முனாபிகீன் 11) எனவே எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சி கோடிய சீதனத்தை தமது சமூகத்தை விட்டும் விரட்ட இளைஞ்சர்களாகிய நாம் ஒன்றுபடுவோமாக. அல்லாஹ்{ என்றும் எம்முடன் துணை இருப்பான். ;
'அல்லாஹ் யாவற்றையம் அறிந்தவன்'
ஒவ்வொரு நுளம்பாக கைகளினால் அடித்து அவற்றின் பெருக்கத்தை ஒழித்துவிட முடியுமா நண்பர்களே..? அவ்வாறு சாத்தியமெனில் மார்க்க போதனைகளால் சீதனத்தையும் ஒழித்துவிடுவதும் சாத்தியமே!
ReplyDeleteபொருளாதார ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில் இத்தகைய சீர்திருத்தங்களென்பது எதுவித பலனையுமளிப்பதில்லை. ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை ஆண்டான் அடிமையெனும் வேறுபாடுகள் ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கும் வரை -ஓரிருவர் விதிவிலக்காக அமைந்தாலும்- ஆற்றுவெள்ளத்தில் அடிபட்டுப்போகும் சருகுகளாய் அதன் திசைக்கே இழுபடுவதுதான் சமூகத்தின் பொதுப்போக்காக இருக்கும்.