மகிந்த ராஜபக்சவின் பெயரை, நீக்கமறுத்த ரணில்
தெற்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகம், விமான நிலையம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றுக்கு சூட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.
அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகம், மத்தள சர்வதேச விமான நிலையம், சூரியவெவ கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பொது நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்க வேண்டும் என பிரதேச அரசியல் பிரதிநிதிகள் , பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்திருந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர், பொது மக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட எந்த நிர்மாணிப்புகளிலும் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச ஆகியோர் தமது பெயர்களை சூட்டிக்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் துறைமுகம், விமான நிலையம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றுக்கு சூட்டுப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நிராகரித்துள்ளார்.
தனக்குத்தானே சால்வை அணிவித்துக்கொள்ளும் சிங்கமல்லவா மகிந்தர்..? சிறு திருத்தம் : உயிரியல் பூங்காச் சிங்கம்!
ReplyDelete