Header Ads



மகிந்தவுக்கு ஒரு வீட்டை, அரசாங்கம் வழங்கவில்லை - கூட்டு எதிர்க்கட்சி கவலை

வரலாற்றில் எந்த தினத்திலும் மகிந்த ராஜபக்ச கட்சியை உடைத்து கொண்டு செல்லவில்லை எனவும் சந்திரிக்கா, மகிந்தவுக்கு கட்சியை உடனடியாக கையளிக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி இன்று -24- கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, மகிந்த ராஜபக்சவை இலக்கு வைத்து வெளியிட்டு வரும் விடயங்கள் பொய்யானவை.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இதுவரை அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை.

ஏ.எஸ்.பி. லியனகே வீடு ஒன்றை வழங்க முற்பட்ட போது, அவரை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைத்து அதனையும் கிடைக்காமல் செய்தனர்.

எலியந்த வைட் மிரிஹானையில் வழங்கிய வீட்டில் மகிந்த ராஜபக்ச வசித்து வருகிறார்.

அதேவேளை தொழில்சார் நிபுணர்களை பிரதமர் திட்டுகிறார். பிரதமரின் செயலை பின்பற்றி, பிரதேச அரசியல்வாதிகள் கூட தொழில்சார் நிபுணர்களை திட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் இது குறித்து அறிக்கை ஒன்றை விடுக்க வேண்டும்.

எமது அரசாங்கத்தின் இறுதிக்காலத்தில் இப்படியே நடந்தது. தற்போதைய அரசாங்கத்தின் இறுதிக்காலம் நெருங்கி விட்டதையே அதன் செயற்பாடுகள் காட்டுகின்றன எனவும் டளஸ் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்தியாவுடன் செய்து கொள்ளும் உடன்படிக்கைகளை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என பிரதமர் கூறியுள்ளார்.

இந்திய மீனவர்கள் மீ்ன் வளத்தை சூரையாடும் போது, அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, அது குறித்து பேச முன்வருவதில்லை என்றார்.

அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, இந்தியாவுடன் செய்து கொள்ளும் உடன்படிக்கையின் அடிப்படையில், 88 அம்புலன்ஸ் வண்டிகளும், சுமார் 600 ஊழியர்களும் இலங்கைக்கு வருவார்கள்.

இந்த வேலைத்திட்டம் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது. இது போன்ற வேலையை இலங்கையர் ஒருவருக்கு வழங்காது ஏன் வெளியாருக்கு வழங்குகின்றனர்?.

இந்தியாவின் பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிட வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் இந்திய எதிர்ப்பாளர்கள் இல்லை. கலப்பு வைத்திய சேவையையே நாங்கள் எதிர்க்கின்றோம் என்றார்.

1 comment:

  1. Emergency patients will receive immediate attention and
    cases that don't require hospitalization , will save
    hospital time and ease their workload .Mahinda's fellows
    wan to stop this govt providing better services to the
    public .

    ReplyDelete

Powered by Blogger.