கூட்டு எதிர்க்கட்சி இன்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், தெரிவித்த முக்கிய விடயங்கள்
ஜனாதிபதி சர்வதேச ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் குறிப்பிடப்பட்ட விடயங்கள், ஐநா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் பின்னர் மாற்றமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு மனித உரிமை தொடர்பிலான விடயங்கள் தொடர்பிலேயே கருத்துக்களை வெளியிட முடியும் எனவும், ஆனால் நாட்டின் உள்ளக விடயங்கள் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
ஒரு நாடு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் நாட்டின் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என கூறிய விமல் வீரவங்ச, அதனை மனித உரிமை ஆணையாளர் கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சுதந்திர தின நிகழ்வொன்றின் போது தேசிய கொடியை ஏற்ற முடியாது என கூறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய கொடியை ஏற்ற முடியாது என கூறிய இராஜாங்க அமைச்சருக்கு எதிராக கட்சியின் தலைமைத்துவம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கும் என விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாட்டை அடிப்பணியும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி மனித உரிமை ஆணையாளரை சந்திப்பதற்கு தயாராக இருந்த போதிலும், அதற்கான தடையை வெளிவிவகார அமைச்சரே விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் கருத்துக்களை தெரிவித்த சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்காத மங்கள சமரவீர பதவி விலக வேண்டியது அவசியம் என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டில் அரசாங்கம் 8.2 பில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டியுள்ள போதிலும், அரசாங்கத்தின் இருப்பில் தற்போது 5.2 பில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இரகசிய முதலீட்டாளர்களை நாட்டிற்கு கொண்டு வரவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சர்வதேச ஊடக நிறுவனமொன்றிற்கு தெரிவித்துள்ளமை பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி மாறியதால் இந்த கூட்டு களவானிகளுக்கு பிழைப்பில்லை. வருவாய் சுருங்கியதில் புத்தி பேதலித்து கூடி நின்று உளருகின்றது கூட்டு களவானிகள் கூட்டம்.
ReplyDeleteகூட்டமாக நாட்டின் இறமைகளை தங்கள் வசமாகி களவு எடுக்க முயட்சிக்கும கயவர் கூட்டமே நீங்கள் தேர்தல்காலத்திலும் பலபொய்களை சொல்லி ஆட்சியை கைப்பற்ற இப்படித்தான் நீங்கள் கூட்டாக இருந்து தோல்வி அடைந்தீர்கள் மக்கள் உங்களை விரட்டிவிட்டார்கள் இதில் புதிய விடயம் பழயகள்ளக்கூட்டத்திட்கு புதிய கட்சி உருவாக்கியுள்ளீர்கள் இதனால் உங்களை மக்கள் மீண்டும் ஏற்று கொள்ள மடையர்களா???
ReplyDelete