Header Ads



காணாமல் போனோரின் உறவுகளுக்கு மதிப்பளித்து, வாகனத்தில் இருந்து இறங்கி வந்த அல் ஹுசைன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சயீத் ரா அத் அல் ஹுசைன் இன்று யாழிற்கு விஜயம் செய்துள்ளார். 

இதன்போது அவர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலத்தில் சந்தித்து கலந்துரையாட சென்றிருந்தார். 

இந்த சந்தர்ப்பத்தில் வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தின் வாசலில் காணாமல் போனோரின் உறவினர்கள் காத்திருந்தார்கள். 

வாகனத்தில் வந்த ஆணையாளர் பாதுகாப்பாளர்களை அழைத்ததுடன், காணாமல் போன உறவினர்களை சந்திப்பதற்கு பிறிதொரு நேரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது, வடமாகாண முதலமைச்சரை சந்திக்கவுள்ளதாகவும் கூறினார். 

மேலும் அவர் இதன்போது காணாமல் போனோர்களின் உறவினர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், வாகனத்தில் இருந்து இறங்கி வந்து உரையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. இஸ்லாமிய நண்பர்களே,

    நமது சக இஸ்லாமியரான திரு. அல்ஹுஸைன் அவர்கள் படித்தவராகவும் ஐ.நாவின் ம.உ.பேரவையின் ஆணையாளராகவம் இருக்கின்றார் என்பதிலே இல்லாத பெருமை அவர் ஓர் உயர்ந்த பண்பாளராகவும் இருக்கின்றார் என்பதிலே எனக்கு நிறையவுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.