சிங்கள - ஆங்கில மொழிமூல மாணவர்களும், குத்பாக்களும்..!!
-அபூபிலால் பர்ஸான்-
கொழும்பில் உள்ள பல மஸ்ஜித்களுக்கு ஆங்கில/சிங்கள மொழிகளில் கற்கும் ஏராளமான மாணவர்கள் ஜும்ஆவுக்கு வருகிறார்கள். பெரும்பாலான போது அவர்கள் கததைத்துக்கொண்டும், சுற்றித்திரிந்துகொண்டும், Mobile போன்களில் விளையாடிக்கொண்டும் இருப்பார்கள்.
நேற்றும் அப்படித்தான் கொழும்பில் ஒரு மிக முக்கிய மஸ்ஜித் ஒன்றில் ஒரு மாணவர்கள் குழு மஸ்ஜிதின் வுழு செய்யும் பகுதியில் குழுவாக இருந்துகொண்டு புகைப்படம் எடுத்துகொண்டிருந்தார்கள். குத்பா நடந்துகொண்டிருந்தது. குத்பா முடிந்த பின்னர் அவர்களை அணுகி ஏன் பள்ளியினுள் இருக்காமல் ஏன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தீர்கள் என்றேன். அதற்கு ஒரு மாணவன் நான் எனது நண்பனைத்தானே புகைப்படம் எடுத்தேன் என்றான். அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டிய போது 'அங்கிள் எனக்குத் தமிழ் தெரியாது' என்று சொன்னான். இம்மஸ்ஜிதிற்கு சுமார் ஆங்கில மொழியில் கற்கும் சுமார் 300 மாணவர்கள் வருகிறார்களாம்.
இம்மாணவர்கள் குத்பாவில் கவனம் செலுத்தாமல், மஸ்ஜித் ஒழுங்குகளைப் பேணாமல் இருப்பதற்கு பின்வரும் நான்கு பிரதான காரணங்களை அடையாளப்படுத்தலாம்.
1. தமிழில் செய்யப்படும் குத்பாக்கள் விளங்குவதில்லை (பல மாணவர்களை அணுகிக் கதைத்திறேன்; அவர்களுக்கு தமிழில் அரபு, ஹிந்தி போல விளங்குவதில்லை - இதை மஸ்ஜித் நிருவாகிகள், கதீப்மார்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்)
2. உண்மையிலே அவர்களுக்கு குத்பாவின் போது மஸ்ஜிதினுள் அமைதியாக இருக்கவேண்டும் என்பது தெரியாது ( இந்த அறிவு பாடசாலையிலோ, வீட்டிலோ, மச்ஜிதிலோ கிடைப்பதில்லை - பல மாணவர்களுக்கு இஸ்லாம் கிடைக்கக்கூடிய ஒரே சந்தர்ப்பமாக குத்பாவே அமைகின்றன)
3. முன்பு போன்று பிள்ளைகளைக் கையேடு மஸ்ஜிதுக்கு கூட்டிச்சென்று இவற்றையெல்லாம் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு பெற்றோருக்கு நேரமுமுல்லை; சந்தர்ப்பமும்அமைவதில்லை
4. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, முன்மாதிரியாக இருக்க வேண்டிய மஸ்ஜித் நிருவாகிகள் மஸ்ஜிதின் கீழ் மாடியிலும், மஸ்ஜிதுக்கு வெளியேயும் குழுக்குழுவாக இருந்துகொண்டு குத்பா முடியும் வரை கதைத்துக்கொண்டிருப்பது. (தகுதியான மஸ்ஜித் நிருவாகிகள் இல்லாமை ஒரு பிரச்சினையே)
சமூகத்தின் எதிர்கால சந்ததி இவ்வாறு வழிகாட்டல் இன்றி வளர்வது மிகவும் ஆபத்தானது. அல்லாஹ்வின் கட்டளைகள் இவ்விளம் சந்ததியினருக்கு பெறுமதியற்றதாகக மாறுகிறது. அதனால் மார்க்கம் ஒரு சடங்காக மாறிவிடும். இந்நிலை பெரும்பான்மை சமுகத்துக்கு் ஏற்கனவே நடந்துவிட்டது.
இதனை நிவர்த்திசெய்ய நீண்டகாலத் தீர்வுகள் அவசியம்.
உதாரணமாக பின்வருவன தீர்வுகளாக அமையலாம்.
1. ஒரு பிரதேசத்தில் உள்ள பல மஸ்ஜித்களில் ஒன்றை சிங்கள/ ஆங்கில மொழிக் குத்பாவுக்கென்றே ஒதுக்கிவைக்கலாம்.
2. தமிழில் நடைபெறும் குபாக்களின் இறுதியில் அன்றைய குத்பாவின் சாராம்சத்தை ஆங்கில/சிங்கள மொழியில் 10 நிமிடத்திற்கு சொல்லலாம். அவ்வாறு முடியாதவர்கள் இதனை பார்த்து வாசித்தாலே போதுமானது. சிங்கள/ ஆங்கில மொழிப்புலமையுள்ள உலமாக்கள் உருவாகுவது காலத்தின் தேவையாகும்.
3. சிங்கள/ ஆங்கில மொழிகளில் மாணவர்களுக்கு விளங்கும் வண்ணம் மஸ்ஜித் ஒழுங்குகள் பற்றி ஒரு விளக்கத்தை அனைத்து மஸ்ஜித்களிலும் காட்சிப்படுத்தல்.
4. குத்பவில் தமிழில் சொல்லப்பட்ட விடயங்களை ஆங்கில/ சிங்கள மொழியில் அச்சிட்டு வழங்கலாம்.
இந்நிலைமையை எவ்வாறு சீர்செய்யலாம்? உங்கள் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது சமூகத்தை நீண்டகால ரீதியில் பாதிக்கக்கூடிய இப்பிரச்சினைக்கு கொழும்பில் உள்ள ஒரு தஃவா அமைப்போ/ குழுவோ முன்வந்து தீர்வு காண்பது மிகமிக இன்றியமையாததாகும்.
கட்டுரையாளரின் கருத்து வரவேட்கத்தக்கது. இதன் முதலும் இனப்பிரச்சினை காரணமாக உலமாக்களுக்கு போதிய சிங்கள பாடம் கற்பிக்கப்பட வேண்டும் சகல மதரசாக்களிலும் சிக்கலம் ஒரு பாடமாக அமைய வேண்டும் அவ்வாறு இல்லாததன் காரணத்தால் பெரும்பான்மை இன மக்களுக்கு நம் உலமாக்களால் இஸ்லாத்தைப்பற்றிய விளக்கம் கொடுக்க முடியாமல் உள்ளது என்ற கருத்துடைய கட்டுரையொன்று அண்மையில் நான் jaffnamuslim க்கு எழுதி இருந்தேன்.பலராலும் வரவேட்கப்பட்டிருந்தது.நன்றி சகோதரர் கட்டுரையாளர் சொல்வதை போன்று பள்ளிவாசல் ஒழுக்கங்கள் சம்மந்தமாக புரியவில்லை என்று சொல்லுமளவுக்கு நம் சமுதாய வாலிபர்கள் இல்லை அவ்வாறு இருந்தாலும் மிக அரிதிலும் அரிது.நம் வாலிபர்கள் வேண்டும் என்றே இவ்வாறு நன்மைகளை பெறவேண்டும் என்ற ஆசை இல்லாமல் தான்தொண்டித்தனமாக உள்ளார்கள்.விசேசமாக பள்ளிவாயல் ஒழுக்க விடயங்கள் பெற்றோர்களால் அதிலும் தந்தைமார்களால்தான் பழக்கப்படுத்த வேண்டுமே தவிர வயது வந்த வாலிபர்களை வேறு யாராலும் திருத்த முடியாது.இரவும் பகலும் இணைய தளங்களில் காலத்தையும் நேரத்தையும் செலவிடும் நம் வாலிபர்கள் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் தெரியவில்லை என்பது வெட்கக்கேடு.
ReplyDeleteWhy srilankan Muslims don't want to teach their mother tungh to their kids? It's so shame.
ReplyDeleteEnglish bayan panninal 90% PHONELA THAN IRUKKUM KATTURAI ELUZHA WENDUM ENKIRAZUKKAHA ELUZHA WENDAM
ReplyDelete