Header Ads



ஊடகங்களை மிரட்டும் ரணில், மைத்திரி கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்..?

நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஊடகங்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் பிரதமர் கருத்து வெளியிட்டு வருவதாக ஜே.என்.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட போது ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதாக உறுதியளித்திருந்தது என அவர் சுட்க்காட்டியுள்ளார்.

எனினும் தற்போது அவ்வாறான சூழ்நிலை கிடையாது எனவும் ஊடகங்கள் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயங்கள் குறித்து ஏன் கவனம் செலுத்துவதில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நல்லிணக்கத்திற்காக பிரதமர் உருவாக்கியுள்ள விசேட செயலணி நாட்டை பிரிவிணைவாதத்தை நோக்கியே நகர்த்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.