ஆளில்லா விமானங்களை வேட்டையாட, கழுகுகளுக்கு பயிற்சி
சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை பல ஆசிய நாடுகளில் கழுகுகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு அவற்றை வேட்டைக்கு பயன்படுத்தி வந்தார்கள்.
இது 21-ம் நூற்றாண்டு. இப்போது நெதர்லாந்து போலீஸ் கழுகுக்கு வேட்டையாட பயிற்சியளிக்கிறது. ஆனால் இரைகளை வேட்டையாட அல்ல, சிறிய ஆளில்லா விமானங்களை. சிறிய ஆளில்லா விமானங்கள் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. எல்லா இடங்களிலும் அவற்றை கவனமாக கண்காணித்து சுட்டு வீழ்த்துவது கடினம். ஆனால் இந்த பிரச்சனைகளுக்கு மிக எளிய தீர்வை கண்டுபிடுத்துள்ளது நெதர்லாந்து போலீஸ்.
மிக உயரத்தில் பறந்தபடி தரையில் இருக்கும் எலி, பாம்பு போன்ற தனது இரைகளை குறிவைத்து தூக்கிச் செல்லும் கழுகுகளுக்கு சிறிய ஆளில்லா விமானங்களை வேட்டையாட பயிற்சியளித்து வருகிறது நெதர்லாந்து போலீஸ். கழுகுகளுக்கு பயிற்சியளிக்கும் வீடியோவை நெதர்லாந்து போலீஸ் வெளியிட்டுவுள்ளது.
இறந்த விலங்குகளை உண்டு கிருமிகள் உற்பத்தியாகமல் தடுத்து வந்த கழுகுகள், விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் அதீதமான பூச்சி கொல்லிகளால் கழுகுகள் அழிவின் விளிம்பில் உள்ளன.
Post a Comment