Header Ads



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை, அழிக்கும் பாவத்திற்கு ஒருபோதும் துணைபோகமாட்டேன் - கரு

எதிர்க்கட்சியில் இருக்கும் ஐ.ம.சு.மு உறுப்பினர்களுக்கு நேரம் ஒதுக்குவதில் அநீதி இழைக்கப்படுவதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய, ஐ.ம.சு.முவுக்குள் காணப்படும் உள்வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டுவந்தால் அதற்குத் தீர்வு வழங்க முடியும் என்றும் கூறினார்.

இருந்தபோதும் ஐ.ம.சு.முவை அழிக்கும் பாவச்செயலுக்கு தான் ஒருபோதும் துணைபோகப்போவதில்லையென்றும் தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சியினரை சுயாதீனக் குழுவாக அங்கீகரிக்குமாறு பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையின்போது கருத்து வெளியிடும்போதே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் 6 கட்சிகளே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் 16 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். சு.க உள்ளிட்ட ஏனைய கட்சிகளைச் சேர்ந்த ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் 51 பேர் தம்மை சுயாதீனமாகச் செயற்படுவதற்கு அனுமதிக்குமாறு எழுத்துமூலம் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், ஐ.ம.சு.முவைச் சேர்ந்த சிலர் ஆளும் கட்சியில் அமைச்சர்களாக இருப்பதால் எதிர்க்கட்சியில் இருக்கும் ஐ.ம.சு.முவினருக்கும் கூட்டமைப்பின் நேரத்திலேயே ஒதுக்கப்படுகிறது. இதனால் அநீதி இழைக்கப்படுகிறது என்றும் கூறினார்.

எனினும், இது உள்ளகப் பிரச்சினை. கட்சிக்குள் இதனைத் தீர்த்துக்கொண்டுவந்தால் தீர்வொன்றை வழங்க முடியும். எதுவாக இருந்தாலும் ஐ.ம.சு.முவை அழிக்கும் பாவச்செயலுக்கு துணைபோகப்போவதில்லை.

அதேநேரம், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான வரப்பிரசாதங்களை உறுதிப்படுத்துவதற்கு தான் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், எதிர்க்கட்சியில் உள்ள ஐ.ம.சு.மு உறுப்பினர்களின் கௌரவத்தை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுத்திருப்பதாகவும் கூறினார்.

No comments

Powered by Blogger.