Header Ads



சட்டத்தை பாதுகாப்பதாக அரசு கூறுகிற போதும், நீதியமைச்சர் குற்றவாளிகளை பாதுகாக்கிறார் - பேராசிரியர் சரத்

புதிய நீதி அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டுமென நீதியான சமூகத்திற்கான அமைப்பின் தலைவர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

மருதானையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நல்லாட்சிக் கொள்கைகள் நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டுமாயின் புதிய நீதி அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

நாட்டின் நீதி பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமாயின் நீதி அமைச்சுப் பதவி சட்டத்தை மதிக்கும் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

சட்டத்தை பாதுகாப்பதாக அரசாங்கம் கூறி வருகின்ற போதிலும் நீதி அமைச்சர் குற்றவாளிகளை பாதுகாத்து வருகின்றார்.

இவ்வாறான ஓர் சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கை எவ்வாறு நிலைநாட்டுவது? தற்போதைய நீதி அமைச்சர் மக்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளார் என பேராசிரியர் விஜேசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.