எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படாது - அடம்பிடிக்கும் அரசாங்கம்
எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் பாரியளவில் எரிபொருளுக்கான விலைகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அதன் நன்மைகள் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.
எரிபொருள் விலை தொடர்பில் விலைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் என அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
எனினும் நாட்டின் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக எரிபொருளுக்கான விலைகளை குறைக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நிலைமைகள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்நோக்கியுள்ள நட்டம் காரணமாக இவ்வாறு எரிபொருளின் விலைகளை மேலும் குறைக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருளுக்கான விலை ஏற்ற இறக்கத்திற்கு அமைய இலங்கையில் எரிபொருள் விலைகளை நிர்ணயிக்கும் விலைப் பொறிமுறைமையை அமுல்படுத்துவது காலம் தாழ்த்தப்படும் என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விலைப் பொறிமுறைமையில சில திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பதனால் விலைப் பொறிமுறைமை அமுலாக்கம் சில காலங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
விலைப் பொறிமுறைமை குறித்து மேலும் ஆராய வேண்டியிருப்பதாக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், எரிபொருளின் விலைகளை குறைக்க எவ்வித திட்டங்களும் கிடையாது என பெற்றோலிய வளத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment