விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசிதவிற்கு, மகிந்த தொலைபேசி வழங்கினாரா..?
சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி மோசடிக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஸவிடம் கையடக்கத் தொலைபேசி காணப்படுவதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதியும் தந்தையுமான மஹிந்த ராஜபக்ஸ, யோசிதவை பார்வையிடச் சென்றுள்ளார்.
தந்தையுடன் பேசியதன் பின்னர் சிறைக் கூடத்திற்கு திரும்பிய போது கையடக்கத் தொலைபேசி கீழே விழுந்துள்ளது.
எவ்வாறெனினும் கையடக்கத் தொலைபேசி கீழே விழுந்தமை தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சம்பவமொன்று பற்றி தமக்கு எதுவும் தெரியாது என சிறைச்சாலையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசி வைத்திருந்தமை குறித்து தகவல்கள் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடத்தப்பட்டால் கையடக்கத் தொலைபேசி காணப்பட்டமை குறித்து சாட்சியமளிக்க இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஆயத்தமாக இருக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சினிமாக்களில்தான் இப்படியான காட்சிகளைப் பார்த்திருப்போம். போதைப்பொருள் கடத்தல் புரியும் பிரபல வில்லனின் கையாட்கள் பிடிபட்டு சிறையில் இருக்கும்போது அவருடைய கையாட்களாகவுள்ள சிறைக்காவலர்கள் சிலர் இப்படித்தான் ஒத்தாசையாக இருப்பார்கள்.
ReplyDeleteஓ! இவர்களும் அதே ஆட்கள்தானே..?