Header Ads



யோஷித்தவின் கைதுக்கு, இவர்கள்தான் காரணம் - அடையாளப்படுத்துகிறார் விமல்

யோஷித்தவின் கைதுக்கு பின்னணி யார் என தெளிவூட்டினார் விமல் யோஷித்த ராஜபக்ஸ கைது செய்யப்படுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியே காரணம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட முன்னணியின் உறுப்பினர்கள் போலியான விடயங்களை காட்டி அரசாங்கத்தை தூண்டி விட்டுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

யோஷித்தவின் கைதுக்கு பின்னால் ஜனாதிபதி, மூன்று அமைச்சர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் ஊழியர்கள் மற்றும் பொலிஸ் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பழிவாங்குவதற்காகவே யோஷித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டதாகவும், அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் இந்த அரசியல் வேட்டைக்கு எதிராக அனைவரும் ஒன்று திரண்டு செயற்பட வேண்டியது அவசியம் என விமல் வீரவங்ச வலியுறுத்தினார்.

குறுகிய காலத்திலேயே பின்னடைவை சந்தித்த முதலாவது அரசாங்கம் இதுவென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.

2 comments:

  1. கற்பனை அரசியல் செய்தால் இப்படியேள்ளாம்தான் பேசத்தோனும்

    ReplyDelete
  2. Bro,
    The reason is Money laundering.

    ReplyDelete

Powered by Blogger.